Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வேணுகோபால சுவாமி
  உற்சவர்: ருக்மணி, சத்யபாமா உடனுறை வேணுகோபால சுவாமி
  அம்மன்/தாயார்: ருக்மணி, சத்யபாமா, செங்கமலவள்ளி தாயார்
  ஊர்: கணபதி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் ஹோம பூஜை நடைபெறுகிறது, பிரதிமாதம் பவுர்ணமி அன்று மாலை 6மணிக்கு சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது. கோபூஜை நாள்தோறும் காலை 6.15 மணிக்கு நடைபெறும் அதில் கலந்து கொண்டால் மகாலெட்சுமி அருள் கிட்டும். மகாலெட்சுமிக்கு தாயாருக்கு ஆடிவெள்ளி மற்றும் வரலெட்சுமி நோன்பற்று விளக்கு பூஜை நடைபெறும். அதில் கலந்து கொண்டு தாயார் அருளைப் பெறலாம். காலை 8.00 மணிக்கு திருவாராதீனம், 11 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு திருவாராதீனமும், இரவு 9 மணிக்கு பள்ளியறை பூஜையும் நடைபெறுகிறது. பிரதிமாதம் திருவோணத்தன்று மாலை கிருஷ்ணருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். கலந்து கொள்பவர்கள் எல்லாவித மேன்மையும் அடைவார். இது தவிர, பங்குனி மாதம் பிரமோற்சவம் நான்கு நாட்கள் நடைபெறும். அதில் கிருஷ்ணருக்கு திருக்கல்யாண வெள்ளி ஊஞ்சலில் நடைபெறும். கருடசேவையும் உண்டு. எல்லா ஆழ்வார்களுக்கும் ஜெயந்தி நடைபெறும். ஆடிபூரம், உரியடி விழா, அம்பு சேவை விழா, மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சனேயருக்கு ஓமம், திருமஞ்சனம், விஜயதசமி, ராமநவமி மற்றும் பிரதி மாதமும் விநாயகருக்கு சதுர்த்தி ஆகியவை நடைபெறும். நவக்கிரகங்களுக்கு கோள்களுக்கு ஏற்ற சிறப்பு பூஜை நடைபெறும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், கணபதி, கோயம்புத்தூர்-641006.  
   
போன்:
   
  +91 94421 37415 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. ஈசான மையத்தில் கருடன் அமைந்துள்ளார். இத்திருக்கோயிலில் கல்லினால் ஆன கருடகம்பம், ராஜகோபுரம் முன்பு உள்ள மண்டபம், ராஜகோபுரம் கொடிக் கம்பம், சக்கரத்தாழ்வார் சன்னிதி, செங்கமலவள்ளி தாயார் என்ற மகாலெட்சுமி சன்னிதி, பள்ளியறை, கோசாலை, ஆழ்வார்கள் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி மற்றும் அனுமன் சன்னிதி, நவக்கிரகம், விநாயகர் மற்றும் மூல கருடன் சன்னிதி ஆகியவைகள் மிக அற்புதமானவையாக அமைந்துள்ளது. வேணுகோபாலன் என்ற கிருஷ்ணர் நடுநாயகமாக ருக்மணி சத்யபாமாவுடன் வீற்றிருக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  தைரியம் கிட்டிட வாக்கு மேன்மை ஓங்கப் பிரார்த்தனை செய்யலாம். பய உணர்வு, விஷ முறிவு, வாகன விபத்து, பிதுர்தோஷம், நினைத்த காரியம் பெற்றிபெற, மகப்பேறு, குழந்தை பிறப்பதற்கு இங்கு பிரார்த்திக்கன்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  கருடனுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் பயஉணர்வு, விஷ முறிவு, வாகன விபத்து, பிதுர்தோஷம் மற்றும் எல்லாதவிதமான அதர்வண வேத, உபாதைகளில் இருந்து விடுபடலாம். சிதறும் தேங்காய் உடைத்தால் தீய சக்திகள் சிதறிபோகும். நினைத்த காரியம் பெற்றிபெற ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றியும் நோய்தீர வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வழிபடலாம். 
    
 தலபெருமை:
     
  மகப்பேறு வேண்டுவோர் மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு உற்சவர் சந்தான கிருஷ்ணருக்குப் பாயாசம் ஊட்டிவிட்டு சேலை துடைப்பால் துடைத்து நம்பிக்கையுடன் வழிபட்டால் மறுவருடத்திற்குள் குழந்தை பிறப்பது நிச்சயம். ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெறும் சக்கரத்தாழ்வார் ஹோம பூஜையில் கலந்து கொண்டால் திருமணத்தடை அகலும், நோயற்ற வாழ்வு, தொழில் மேன்மை கிடைக்கும்.

மகாசுதர்சனம் ஆசி பெற்றால் குழந்தைகளுக்கு பய உணர்ச்சி குறையும். பிறந்த குழந்தைகளுக்கு துலாபாரம் நினைத்த பொருளில் கொடுக்கலாம். வியாதி நீங்கவும் வேண்டுதல் நிறைவேறவும் துலாபாரம் கொடுக்கிறார்கள். கோவையில் எந்தத் திருத்தலத்திலும் இல்லாத பிரார்த்தனை இங்கு உள்ளது. நாம் நினைத்த காரியம் நடைபெற பாசி அள்ளுதல் சிறப்பு தரும். பிரதிமாதம் பவுர்ணமி அன்று மாலை 6மணிக்கு சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது. செல்வம் செழிக்கச் சிறந்த பூஜையில் பங்கு கொள்ளலாம்.
 
     
  தல வரலாறு:
     
  இத்திருத்தலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மைசூரை ஆண்ட யாதவ வம்சத்து மகாராஜாவால் கட்டபெற்றது என்று வரலாறு கூறுகிறது. இது கோயிலின் முன் அமைப்பாக கோட்டை விநாயகர் கோயில் உள்ளது. அதை வைத்து இந்த கிராமத்திற்கு அக்காலத்தில் கணபதி என்ற பெயர் வழங்க பெற்றுள்ளது. கி.பி. 1764ல் மாதையா என்ற உடையார் வம்சத்து அரசர் இத்திருத்தலத்தை புனருத்தாரணம் செய்துள்ளார் என்ற வரலாறுகளும் கல்வெட்டுகளும் கூறுகின்றன. யாதவ மன்னர் கட்டும்போது 5 கோயில்களை நிறுவி உள்ளார். 1. கணபதி, 2. கொள்ளோ காலம் (மைசூர்), 3. சத்யமங்கலம், 4. சலிவன் வீதி (கோவை), 5. பாலக்காடு (கேரளா) கோயில் பணிகளைச் செம்மையாகச் செய்ய தொடக்க காலத்தில் இருந்தே மைசூர் சீரங்கபட்டிணத்தில் உள்ள வைணவ பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாரிசுதாரரைக் கூட்டி வந்து ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வழிமுறையில் வந்தவர் இத்திருத்தலத்தின் பரம்பரை அறங்காவலர் பொறுப்பில் இந்த கோயில் நிலங்களை விற்று அதை திருத்தலத்தின் நிரந்தர முதலீட்டாகச் செய்துள்ளனர். இத்தலத்தில் தேரோட்டம் தெப்ப உற்சவம் நடந்ததாக கூறப்படுகிறது. வைணவ திருத்தலங்களில் ஆழ்வார்களால் பாடபெற்றவை திவ்ய திருப்பதிகள் எனவும், பிறரால் பாடப்பெற்றவை அபிமான ஸ்தலங்கள் எனவும் கூறுவர்.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar