சித்திரை 1ம் தேதி, அமாவாசை, பவுர்ணமி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
சுயம்பு மூர்த்தமாக அமைந்துள்ளது சிறப்புமிக்கதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 10மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வனபத்ரகாளி அம்மன் திருக்கோயில்,
சின்னமலை அடிவாரம்,
பொம்மனாம்பாளையம்,
வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.
போன்:
+91 95245 27038
பொது தகவல்:
வடக்கு பார்த்த பத்ரகாளியம்மன் மற்றும் சுயம்பு மூர்த்தி, கிழக்கு பார்த்த கன்னிமார், நாகர் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம், குடும்ப கஷ்டங்கள் உள்ளிட்ட சங்கடங்கள் நீங்க 11 நாட்கள் அல்லது 21 நாள் தொடர் வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
கெடா வெட்டு, அம்மனுக்கு நகை சாட்டுதல் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
150 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சுயும்பு மூர்த்தியும், அரச மரமும் இந்த கோயிலின் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.
தல வரலாறு:
கோவை பொம்மண்ணம்பாளையம் சின்னமலை அடிவாரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பாட்டி சித்தரால் அமைக்கப்பட்டதே இந்த வனபத்ரகாளியம்மன் கோயிலின் சுயம்பு லிங்க மூர்த்தி. மருதமலையில் வீற்றிருக்கும் பாம்பாட்டி சித்தர் அங்கிருந்து முன்னர் காலத்தில் குகைகள் வழியாக அடிக்கடி இந்த சுயம்பு லிங்க மூர்த்திக்கு வந்து பூஜை செய்தது முன்னோர்களால் கூறப்பட்டது.சுயம்பு லிங்க மூர்த்தி இருக்கும் நேரத்திலேயே இங்கு அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்தே இதற்கு வனபத்ரகாளியம்மன் என்ற பெயரும் வந்தது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு முன்பெல்லாம் பக்தர்கள் அடிக்கடி செல்ல மாட்டார்கள். ஆனால் நினைத்த காரியங்கள் நிறைவேறி வருவதையடுத்து 1995 ஆம் ஆண்டு முதல் பத்ரகாளியம்மன் கோவில் சீரமைக்கப்பட துவங்கியது. கடந்த வருடம் 2016 ல் விநாயகர் சிலை ஒன்றும் புதிதாக நிறுவி கும்பாபிஷேகம் நடந்தது. பொதுவாக இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கஷ்டங்கள் இருந்தாலும் இங்கு வந்து சென்றால் ஒரு மாற்றம் நிகழும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சுயம்பு மூர்த்தமாக அமைந்துள்ளது சிறப்புமிக்கதாகும்.
இருப்பிடம் : காந்திபுரத்திலிருந்து வட வள்ளி வழியாக தொண்டாமுத்துர் பஸ்ஸில் (பஸ் எண் 64) பொம்மனாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோவில் 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். வடவள்ளியிலிருந்து மினி பஸ்களும் பொம்மனாம்பாளையத்திற்கு வருவது உண்டு.