Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வள்ளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வள்ளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வள்ளியம்மன்
  அம்மன்/தாயார்: வள்ளி
  தல விருட்சம்: அரசமரம்
  ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
  புராண பெயர்: கோவன்புதுார்.
  ஊர்: மருதமலை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூசம், பங்குனி உத்திரம், அமாவாசை, பௌர்ணமி சிறப்பு பூஜைகள்.  
     
 தல சிறப்பு:
     
  பக்தர்களின் குறை கேட்க அம்மன் தலை ஒருபுறம் சிறிதாக சாய்ந்த வண்ணம் உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 7 மணி முதல் 11மணி வரை மாலை: 5 மணி முதல் 8மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு வள்ளியம்மன் திருக்கோவில் மருதமலை அடிவாரம் மருதமலை கோவை - 641041  
   
போன்:
   
  +91 9787460777 , 7598294899 
    
 பொது தகவல்:
     
  மருதமலை அடிவாரத்திலுள்ள கிழக்கு பார்த்த வள்ளியம்மன் கோவிலின் முகப்பில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இடதுபுறம் கோவிலை சுற்றி வரும் போது தல விருட்சகமான அரசமரமும், அதன் கிழே கிழக்கு பார்த்த விநாயகரும், மேற்கு பார்த்த மூஞ்சுறுவும் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து கிழக்கு வாசல் வழியாக உள்ளே வரும்போது பலிபீடமும், கிழக்கு பார்த்த விநாயகர், முருகன் மற்றும் மூலஸ்தான வள்ளியம்மன் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
   திருமணத்தடை , புத்திர பாக்கியம், நோய் நொடிகள் நீங்க 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்களால் இயன்றவை 
    
 தலபெருமை:
     
  பக்தர்களின் குறை கேட்க அம்மன் தலை ஒருபுறம் சிறிதாக சாய்ந்த வண்ணம் உள்ளதும், அரசமரத்தின் பாதியில் வந்துள்ள வேப்பமரத்தின் இலையும் இந்த கோயிலின் சிறப்பு. மேலும் வள்ளியம்மன் தவம் மேற்கொண்ட 3 புன்னிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. திருமணத்திற்காக தவம் இருந்த இந்த வள்ளியம்மனிடம் வேண்டினால் சீக்கிரம் திருமண தடை நீங்கும்.    
 
     
  தல வரலாறு:
     
  முருகனை திருமணம் செய்ய வேண்டிய இட்சையால் கைலாயம் அருகே மான சொருபம், பருவதமலை, மேற்கு தொடர்ச்சி மலையான வெள்ளியங்கிரி மருதமலை ஆகிய இடங்களில் வள்ளி தவம் இருந்தது புராணங்கள் கூறுவது.

சிவனின் ஆனந்த கண்ணீரில் பாற்கடலில் பட அதில் தோன்றிய முத்துகளால் வந்தவர்கள் சுந்தரவள்ளி, அமுத வள்ளி.  இவர்கள் சிவபெருமானிடம் ஆனந்தம் மட்டுமே வாழ்வாய் இருக்க வேண்டியுள்ள நேரம், பெருமான் இருவரையும் தவம் இருக்க கூறினார். பல ஆண்டுகள் இருவரும் தவமிருந்தனர். பல ஆண்டு தவத்தின் பின்னர் இவர்கள் முன் தோன்றிய சிவபெருமானிடம் ஆனந்தத்தால் உருவான நாங்கள் ஆனந்தமே வாழ்க்கையாக இருக்க விரும்புகிறோம் எனும் வரத்தை கேட்டுள்ளனர். ஈஷானம், தத்புஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாத்தம் எனும் ஐம்முகங்களுடன் பதில் கூறிய சிவ பெருமான் அதோ முகம் என்ற ஆறுமுகத்துடன் காரண ஜென்மாகவாக அவதாரம் எடுப்பேன், அப்போது நீர் எம்மை வந்து அடைவீர் என்றும்,  தவ வலிமை அதிகம் உள்ள அமுதவள்ளி தேவலோகத்தில்  தேவேந்திரனுக்கு மகளாக பிறந்து தெய்வ யானையை வளர்த்து தெய்வானை என்று பெயர் பெற்று எம்மை வந்தடைவாய் என கூறியுள்ளார். தவ வலிமை குறைவாக உள்ள சுந்தரவள்ளி பூலோகத்தில் மான்வயிற்றில் கருபெற்று, வெள்ளி கிழங்கால் உருபெற்று, வேடவ தலைவன் வேடவராஜாவால் வளர்க்கப்பட்ட உன்னை தக்க தருணத்தில் யாம் வந்தடைவேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் வள்ளி கிழங்கின் குகையில் பிறந்ததால் வள்ளி என பெயர் பெற்றால் சுந்தரவள்ளி. வேடவராஜாவால் வளர்க்கப்பட்ட வள்ளியை திருமணம் செய்து கொடுக்க வழிபாட்டில் ஈடுபட்டனர். சிவனால் உருவான முருகனை திருமணம் செய்ய மீண்டும் தவகோலம் இருந்த இடம் தான் இந்த மூன்று ஸ்தலங்களான கைலாயம், பருவதமலை , மருதமலை. இந்த மூன்று இடங்களும் சிவன் முதல் முறையாக சுந்தரவள்ளி மற்றும் அமுதவள்ளிக்கு காட்சியளிக்க சக்தி லோகத்தில் கால் பதித்த இடம். ஒரு கையில் செங்கமல புஷ்பம் ஏந்தியும், நிலத்தில் பிறந்ததால் மற்றொரு நிலத்தை நோக்கியும் தன் தவத்தின் வலிமையால் இங்கேயே இருக்கிறார்.

தைப்பூசம் தான் முருகன் - வள்ளி திருமணம் நடந்த தினமாகும். பல வருடங்களாக பழமையாக காணப்பட்ட வள்ளியம்மன் கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டு  காரண ஆகம விதிகளின்படி அஷ்டபந்தன கும்பாபிேஷகம் கடந்த நவம்பர் 2016ல் நடந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar