சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், பொங்கல் விழா, 5 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா
தல சிறப்பு:
அரச மர பிள்ளையார் சிலை முன்பு முஞ்சுறு மற்றும் நந்தி வாகனங்கள் ஒரே இடத்தில் இருப்பதும், சித்திரை மாதத்தில் ஒரு நாள் மட்டும் சூரியனின் ஒளி அம்மன் மீது படுவதும் சிறப்பு
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில்
கஸ்தூரிநாயக்கன்பாளையம்
வடவள்ளி - 641041
போன்:
+91 9843342420
பொது தகவல்:
கோயிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு வாசல் இருக்கிறது. முதலில் கோயிலின் இடதுபுறம் கிழக்கு பார்த்த அரசமர விநாயகரும் மேற்கு பார்த்த முஞ்சுறு, நந்தி வாகனம் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.அதனையடுத்து கோவிலின் முகப்பில் தலவிருட்சகமாவ வேப்பமரம் அமைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கியுள்ள கோவிலின் உள்ளே சென்றதும் கிழக்கு பார்த்த விநாயகர், முருகன், சப்த கன்னிமார், கருப்பராயன், மாகாளி அம்மன், மேற்கு பார்த்த சிம்ம வாகனம் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
நோய் நொடி நீங்குதல், கல்யாணம் சீக்கிரம் நடைபெற, தொழில் உள்ளிட்டவற்றில் நினைத்த காரியங்கள் நடைபெறும்.
நேர்த்திக்கடன்:
மாங்கல்ய காணிக்கை, பூச்சட்டி
தல வரலாறு:
தாய்தெய்வ வழிபாடு மிக்தொன்மையானது. சிந்துசமவெளி அகழ்வாய்வில் கொற்றவையாகிய காளிதேவியின் திருவுருவம் கிடைத்துள்ளது. தொல்காப்பியம் கொற்றவையாகிய காளிதேவியை குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களில் கொற்றவை வழிபாட்டை பாராட்டி கூறுகின்றன. சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் தாய்த் தெய்வமாகிய அன்னையை பாலைத்தினைக்கு காளிதேவி வழிபடு தெய்வம் ஆவாள். தாரகன் என்ற அரக்கனை அழிக்க ஒரு முறையும், தக்கன் யாகத்தை அழிக்க ஒரு முறையும் காளிதேவி தோன்றினாள் என்று பாடிய களிங்கத்து பரணி முதலிய பரணி நு?ல்களில் காளிதேவியை பலவாறு வழிபட்ட செய்தி காணப்படுகிறது. திருமுறைகளில் காடுகிழாள், மோடி, காளி, பிடாரி, கொற்றவை என பலவாறாகக் குறிப்பிடகின்றன.
கோவை வடக்கு வட்டம், வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் உழவு தொழில் செய்யும் மக்கள் மரபு வழியாக வாழ்ந்து வருகின்றனர். 300 ஆண்டுகள் பழமையான அருள்தரும் மாகாளி அம்மனுக்கு திருக்கோயில் அமைத்து வழிபாடு செய்து வந்தனர்.தற்போது உழவு தொழிலோடு பிறதொழில்களும் மாகாளியின் அருளால் பல்கி பெருகியுள்ளன. இதனால் உள்ளூர் பெருமக்களும், மாகாளியம்மன்பால் பக்தி கொண்டவர்களும் இணைந்து அம்மனுக்கு புதியதாக கருவறை , அர்த்த மண்டபம் கல்திருப்பணியாகவும், விமானம், முன்மண்டபம் , விநாயகர், முருகன், கருப்பராயன், கன்னிமார், உள்ளிட்ட தெய்வங்களை வடிவமைத்து கடந்த 2016 ஆகஸ்ட் 07 ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அரச மர பிள்ளையார் சிலை முன்பு முஞ்சுறு மற்றும் நந்தி வாகனங்கள் ஒரே இடத்தில் இருப்பதும், சித்திரை மாதத்தில் ஒரு நாள் மட்டும் சூரியனின் ஒளி அம்மன் மீது படுவதும் சிறப்பு
இருப்பிடம் : காந்திபுரத்திலிருந்து 70, 70ஏ, ஓண்டிபுதூரிலிருந்து 1சி, 1பி உள்ளிட்ட பேருந்துகளில் ஏறி வடவள்ளி வந்திறங்க வேண்டும். வடவள்ளியிலிருந்து வடக்கு நோக்கி 2 கி.மீ., தூரத்தில் தான் கோவில் உள்ளது. இதற்கு ஆட்டோவிலும் செல்லலாம் அல்லது வடவள்ளியிலிருந்து கணுவாய் செல்லும் மினிபஸ்ஸில் ஏறி கஸ்தூரிநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப் என்று கேட்டால் கோவில் முன்பாகவே பஸ் நிற்கும்.