தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. சிறப்பாக அமாவசை, பெளவுர்ணமி, நாட்களில் அம்மனுக்கு, பிரதோசகாலத்தில் சிவனுக்கும், கிருத்திக்கை சஷ்டி நாட்களில் முருகனுக்கும் வாரசனிக்கிழமை கால மாகவிஷ்னுவுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
மாரியம்மனை வழிபட்டு அம்மை நோய் நீங்கும், குழந்தை வரம், திருமணதடை, வேண்டியும் வழிபட்டு வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
தலபெருமை:
இக்கோவிலில் வேம்பும் அரசும் இணைந்தும் கோவிலின் முன்பு உள்ள மரத்தில் விநாயகர் பெருமானும் ராகு கேது மூர்த்திகள் அமைந்தது கோவிலின் தல பெருமை.
தல வரலாறு:
வைசூரி என்றும் பெரியம்மை வந்தவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இத்திருக்கோவில் உள்ள மாரியம்மன் வழிபட்டு அம்மை நோய் நீங்கி அருள் பெற்று வந்தனர்.மேலும் குழந்தை வரம்,திருமணம் வேண்டியும் இத்திருக்கோவில் வழிப்பட்டு வந்தனர் இக்கிராம மக்கள் ஒன்று கூடி திருப்பணிகள் செய்து 25 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு செய்து சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். இககோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் அமைந்துள்ளது.