காலை 730 மணி முதல் மணி1030 வரை, மாலை 5 மணி முதல் இரவு 730 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நாகேஸ்வரி உடனமர் நாகநாத ஈஸ்வரர் கோயில், பழைய மாங்காடு632503. ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு.
போன்:
+91 9489343010, 9952379658
பொது தகவல்:
சேக்கிழார் பெருமானின் ஆன்ம மூர்த்தியாக விளங்கி அருள் புரிந்து வருகிறார். இத்திருக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் புதுப்பிக்கும் பொருட்டு, 10062006 அன்று பாலாலயம் செய்யப்பட்டு, சுமார் பத்தாண்டு காலம் புனரமைப்பு செய்யப்பட்டு, 2352016 அன்று திருக்குட நன்னீராட்டு விழா செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தோஷ பரிகார நிவர்த்திக்காக இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றப்படுகிறது.
தலபெருமை:
இந்த ஆலயம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், ராஜகோபுரம், ஆகியவற்றுடன் சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் அம்பாள் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.
தல வரலாறு:
இத்திருக்கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர் காலத்தில் கற்கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. இத்திருக்கோயில் பாலாற்றின் தென்கரையில் இயற்கையான சூழலில் அமையப்பெற்றுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு மூலவர் நாகநாத ஈஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார்.
இருப்பிடம் : ஆற்காட்டில் இருந்து கலவை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ தொலைவில், பழைய மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது. ஆற்காட்டிலிருந்து பேருந்து வசதி உண்டு. பேருந்து நிறுத்தம் லப்பை பேட்டை.