பிரதோஷம், அம்மாவாசை, கிருத்திகை, அண்ணஅபிசேகம், சிவராத்திரி, மார்கழி பூஜை, புரட்டாசி சனிகிழமை. இது தவிர மார்கழி மாதம் ஊருக்குள் திரு வீதி உலா வரும்.
தல சிறப்பு:
அண்ணமார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அண்ணமார் பண்டிகை 5 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். அரசமரம் மற்றும் வேம்புமரம் இணைந்து இத்தலத்தில் காட்சியளிக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில்
உடையாம்பாளையம், 641028
சவுரிபாளையம் அருகே
கோயமுத்தூர்.
போன்:
+91 98422 48558
பொது தகவல்:
விநாயகர், மூலவர், விசாலாட்சி ,அண்ணமார், பெருமாள்ஆண்டாள், முருகன், தட்சணமூர்த்தி, கன்னிமார், லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர், யானை மீது கருப்பராயர், முனியப்பசுவாமி ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. இது தவிர நவகிரகங்கள் தம்பதி சமேதரயாய் இங்கு காட்சி அளிப்பது கூடுதல் சிறப்பு. மேலும் குன்றுடையான், தாமரை அரியநாயகி, பொன்னர், சங்கர், அருக்கானி நல்லதங்காள் ஆகியோருக்கும் இங்கு விக்கிரகங்கள் உண்டு.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி
நேர்த்திக்கடன்:
அன்ன அபிசேகம், காணிக்கை செலுத்துதல்
தலபெருமை:
இங்கு பொன்னர்– சங்கர் வழிபட்டதால் அண்ணமார் கோயில் என அழைக்கப்படுகிறது. இக் கோயில் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகவும், சுற்றுப்புறங்களில் 6 ஏக்கர் பூமியும் உள்ளது. மேலும் 1964 ல் நடந்த இக்கோயில் கும்பாபிேஷகத்தில் திரைப்பட பாடகி கே.பி சுந்தராம்மாள் கலந்து கொண்டுள்ளார்.
தல வரலாறு:
திருச்சி கரூரிலிருந்து வீரப்பூர் அண்ணமார் கோவிலியிருந்து தீர்த்தம் எடுத்து வந்து இங்கு சிவாலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அண்ணமார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அண்ணமார் பண்டிகை 5 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். அரசமரம் மற்றும் வேம்புமரம் இணைந்து இத்தலத்தில் காட்சியளிக்கிறது.