Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குழந்தை வேலப்பர்
  ஊர்: பூம்பாறை, கொடைக்கானல்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  அருணகிரி நாதர்

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி திகழ் சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பாறையில் மேவு பெருமாளே

(திருப்புகழ்)

 
     
 திருவிழா:
     
  பழநி தைப்பூச திருவிழாவின் மறுநாள் மகம் நட்சத்திரத்தில் கொடியேற்றம், அடுத்து திருவீதியுலாவாக வாகனப்புறப்பாடு. 9ம்நாள்(கேட்டை நட்சத்திரம்) திருத்தேர் உலா, 10ம் நாள் முருகனை பழநிக்கு வழியனுப்பும் விழா.  
     
 தல சிறப்பு:
     
  இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை 1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, 2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. பழநி முருகனும், பூம்பாறை முருகனும் உருவத்தில் ஒரே மாதிரி இருக்கும். மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் தேர் வீதி உலா நடைபறுவது இங்கு மட்டுமே. தேரின் முன்புறம், மற்றும் பின்புறம் வடம் பிடித்து தேர் இயக்கப்படுகிறது. இப்படி இருவடத்தேர் இயங்குவதை இங்கு காணலாம். அத்துடன் முருகனடியார்கள் வரிசையாக நின்று தேர் அச்சின் மீது 25000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடு கண்கொள்ளா காட்சியாகும். இக்கோயில் மூலவர் குழந்தை வேலப்பர் சிலை, பழனி தண்டாயுதபாணி முருகன் சிலையை போல அமைந்துள்ளது,  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்பட்டது. 
   
முகவரி:
   
  அருள்மி குழந்தை வேலப்பர் திருக்கோயில் (பழநி தண்டாயுதபாணி கோயிலின் உபகோயில்) பூம்பாறை 624103 கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம்  
   
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது. வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர். 
    
நேர்த்திக்கடன்:
    
  குழந்தை வேலப்பருக்கு அபிஷேகம் செய்கின்றனர் 
    
 தலபெருமை:
     
  இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்.
உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர்.

ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உ ருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட, அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.
 
     
  தல வரலாறு:
     
  சுமார் 10 அல்லது 12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது கடைசி 12வது வனமான பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும்.

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ரசாயன பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார்! அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.

பின்னர் மறுபடியும் வெளி நாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார்,

அந்த சிலைதான் பூம்பாறை முருகன் சிலை. பின் அதை மலையுச்சியில் சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து, சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார்.

அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது, முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம். ,

இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்ட அருணகிரி நாதர்,  குழந்தை வேடத்தில் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார். அவரின் பக்கத்திலேயே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar