Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுப்பிரமணியர்
  உற்சவர்: தண்டாயுதர்
  தீர்த்தம்: வள்ளி, தெய்வானை தீர்த்தம்
  புராண பெயர்: மலைக்கிணறு
  ஊர்: திருமலைக்கேணி
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி, தை கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயில் கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக அமைந்திருக்கிறது. கீழ் பழநி: குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இக்கோயிலை, "கீழ் பழநி' என்றும் அழைக்கிறார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி - 624 306. செங்குறிச்சி போஸ்ட், திண்டுக்கல் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-451 - 205 0260, 96268 21366 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் சக்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. கோயில் வளாகத்திலுள்ள மாமரத்தின் அடியில் அருணகிரியார் காட்சியளிக்கிறார். இக்கோயிலுக்கு அருகில் மவுனகுரு சுவாமிகள் அதிஷ்டானம் இருக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
 

பொறுப்பான பதவி கிடைக்க, தலைமைப்பண்பு வளர இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தெய்வானை தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வேண்டிக்கொள்கின்றனர்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுப்பிரமணியரை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தும், விபூதி மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இரண்டடுக்கு கோயில்: மலையில் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால், முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார், கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால், பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே, அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது.


ராஜ தரிசனம்: மூலஸ்தானத்தில் முருகன், பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து, ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள். இந்த கோலத்தில் முருகனை தரிசித்தால், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கும் என்கிறார்கள். உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், "மலைக்கேணி' (கேணி - கிணறு) என்று பெயர் பெற்றது.


கீழ் பழநி: குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இக்கோயிலை, "கீழ் பழநி' என்றும் அழைக்கிறார்கள். கந்த சஷ்டி விழா 7 நாட்கள் நடக்கும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


 
     
  தல வரலாறு:
     
 

இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். அவ்வேளையில் அவரது கனவில் தோன்றிய முருகன் தீர்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி, மன்னர் இங்கு கோயில் எழுப்பினார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயில் கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக அமைந்திருக்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar