அம்மாவாசை, பெளர்ணமி, ஆடி வெள்ளிக்கிழமைகள், ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, முளைப்பாரி விழா, திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை, அம்மன் திருவீதி உலா உள்பட ஆனிமாத விழா ஒரு வார காலத்திற்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பால விநாயகர் மற்றும் பால முருகன் சன்னதி உள்ளதால் சதுர்த்தி மற்றும் கிருத்திகை விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
சிவபார்வதி தனி ஆலயமாக இப்பகுதியில் இருப்பது தனிச்சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை: 7 மணி முதல் 8 மணி வரை மாலை: 6 மணி முதல் 8 மணி வரை.
மூலவரான சிவபார்வதி வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பால விநாயகர் மற்றும் பால முருகனும் வடக்கு நோக்கியே அருள்பாலிக்கின்றனர். இது தவிர துர்கை அம்மன், மகாலட்சுமி, பிரம்மி, ராகு-கேது மற்றும் காளை வாகனம் உள்ளது.
பிரார்த்தனை
திருமண தடை, குழந்தை பாக்கியம், உடல் நலன், தொழில் வளர்ச்சி உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு புடவை சாத்துதல், மாங்கல்யம் சாத்துதல், பிரசாதம் வழங்குதல் உள்பட திருவிழா காலங்களில் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செய்கின்றனர்.
தலபெருமை:
கோவை மாவட்டத்தில் சிவபார்வதிக்கு என்று தனி கோயில் என்ற பெருமை பெற்ற தலம்.
தல வரலாறு:
கோவை குனியமுத்துாரை ஒட்டி இடையர்பாளையம் ஊர் உருவான போது இங்கு யாதவ சமூதாய மக்களும், குரும்பர் இன மக்களும் பெருமளவில் குடியியேறினர். குரும்பர்களின் குல தெய்வமான மகாலட்சுமிக்கு தனி கோயிலும், யாதவர் சமூகத்திற்கு கிருஷ்ணர் கோயிலும் கட்டப்பட்டன. பின் நாளடைவில் பல மக்கள் இப்பகுதியில் குடியேறிய பின் மாரியம்மனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டு அது பொது கோயிலாக இருந்து வந்தது. பின் இப்பகுதியில் சுயம்புவாக இருந்த மாகாளி அம்மன் கோயிலை புதிதாக கட்டி கும்பாபிேஷக பணி துவங்க ஆரம்பித்த போது ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து சிவபார்வதி தலமாக மாற்றி அமைத்து கொள்ளலாம் என முடிவெடுத்து அமைக்கப்பட்ட கோயிலாக மாறியது. இன்று இப்பகுதியில் சிவபார்வதிக்கு உள்ள ஒரே கோயில் இதுதான் என்ற சிறப்புடன் விளங்கிவருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோவை மாவட்டத்தில் சிவபார்வதிக்கு என்று தனி கோயில் என்ற பெருமை பெற்ற தலம்.
இருப்பிடம் : பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், உக்கடத்திலிருந்து குனியமுத்துார் பத்து நிமிடத்திற்கு ஒரு பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து இடையர்பாளையத்திற்கு மினி பஸ் மற்றும் ஆட்டோக்களில் பயணிக்கலாம். பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுந்தராபுரம் பகுதியிலிருந்தும் பயணிக்கலாம்.