ஆடி 18 பெருக்கு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் இறந்து போன தங்கள் முன்னோர்கள் நினைவாக, பாட்டுப்பாடி வழிபடுகின்றனர். மேலும் அம்மாவாசை, பெளர்ணமி தினங்கள், சிவராத்திரி, பிரதோசம், கார்த்திகை தீபம் உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
முன்னோர்கள் நினைவாக இக்கோயில் சிறப்பு பூஜை நடத்தி, வழிபடுவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை: 7 மணி முதல் 8 மணி வரை மாலை: 6 மணி முதல் 8 மணி வரை
முகவரி:
அருள்மிகு ஈஸ்வரர்–கருப்பசாமி கோயில்
உடையாம்பாளையம், கோயமுத்துார்
போன்:
+91 98422 02782
பொது தகவல்:
கோயில் முகப்பில் பிரம்மாண்டமான வில்லுகள் இரண்டு வாசலில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர அனைத்து தெய்வங்களும் சுயம்பு உருவில் காணப்படுகின்றன. முன்னோர்கள் பயன்படுத்தி போர் கால கருவிகளும், பூஜை பொருட்களான ஆனிக்கால் செருப்பு, சாட்டை, சலங்கை, பந்த சேவை போன்ற பொருட்களும் பூஜிக்கப்படுகின்றன.
பிரார்த்தனை
தங்கள் முன்னோருக்காக இக்கோயில் பிராத்தனை செய்வதால், தாங்களும், தங்கள் பின் வரும் சன்னதியினரும் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
மாலை அணிவித்தலும், அன்னதானம் வழங்குதலும் இக்கோயிலின் முக்கிய நேர்த்தி கடனாக கருத்தப்படுகிறது.
தலபெருமை:
பல ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு வில்லுப்பாட்டு பாடி, பக்கதர்கள் ஆடுவது இக்கோயிலின் தலப்பெருமை ஆகும்.
தல வரலாறு:
இப்பகுதியில் வாழும் தேவர் சமூகத்தினரின் அகமுடையார் பிரிவின் புலவர் கூட்டத்தினரின் குல தெய்வ கோயில் இது. 200 ஆண்டுகளுக்கு முன் ஓட்டு கட்டிடத்தில் கட்டப்பட்ட கோயில் ஆகும். அதாவது தங்கள் முன்னோர்களின் நினைவாக அவர்கள் போரில் பயன்படுத்திய வாள், வேல் போன்ற பொருட்களும், அவர்களின் பூஜைப்பொருட்களும் இக்கோயிலில் வைத்து இன்றும் பூஜித்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை ஆடிப்பெருக்கு விழாவில் முன்னோர்கள் நினைவாக சுயம்பு தெய்வங்களின் முன் படையல்கள் வைத்து, வில்லுப்பாட்டு பாடி வழிபடும் பழக்கத்தை ஆண்டாண்டு காலமாக செய்து வழிபடுகின்றனர். மாமன்மார்கள் பாட்டுப்பாடி வில்லு இசைக்க, மருமகன்கள் ஆடிய படி அருள்பிரசாதம் வழங்குகின்றனர். மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் தற்போது இந்நிகழ்ச்சியை செய்து வருவது சிறப்பு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பல ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு வில்லுப்பாட்டு பாடி, பக்கதர்கள் ஆடுவது இக்கோயிலின் தலப்பெருமை ஆகும்.
இருப்பிடம் : கோவை காந்திபுரம் மற்றும் சிங்காநல்லுார் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் உடையாம்பாளையத்திற்கே (செளரிபாளையம்) பஸ் வசதி உண்டு. அவிநாசி ரோடு நவ இந்தியா பஸ் ஸ்டாப்பிலிருந்து, ஆட்டோக்களில் பயணிக்கும் துாரத்தில் கோயில் உள்ளது.