Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு துண்டுதடி கருப்பராயன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு துண்டுதடி கருப்பராயன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: துண்டுதடி கருப்பராயன்
  உற்சவர்: துண்டுதடி கருப்பராயன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: கிணறு நீர்
  புராண பெயர்: கணபதி
  ஊர்: கணபதி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தினந்தோறும் பகல் 12.00 மணிக்கும், மாலை 6.00 மணிக்கும் தீப வழிபாடும், பிரதி வெள்ளிக்கிழமைகளும், அமாவாசைகளிலும் பகல் 2.00 மணிக்கு சிறப்பு அபிசேக, அலங்கார பூஜைகளும் நடைபெற்று வருகிறது. திருவிழா ஆண்டுதோறும் அருள்மிகு கருப்பராயரின் அருளானை கிடைத்தவுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம், முழுவதும் மார்கழி பூஜை நடைபெறும். ஆடி மாத வெள்ளிக்கிழமை பூஜைகளும் உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  தோட்டங்களில் பாதுகாவலானாய் இருந்து, பயிர்களை காக்கும் தெய்வம் என்ற சிறப்பு பெற்ற தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 7 மணி முதல் 8 மணி வரை மாலை: 6 மணி முதல் 8 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு துண்டுத்தடி கருப்பராயன் கோயில், மோர் மார்க்கெட், கணபதி, கோயமுத்துார் - 641006  
   
போன்:
   
  +91 8124572486 
    
 பொது தகவல்:
     
  மூலவர் கருப்பராயன் ஒரு கையில் அரிவாலுடனும் மறு கையில் துண்டு தடி ஏந்தியவாறும் உள்ளார். அருகில் கிழக்கு நோக்கி கன்னிமார் தெய்வம் உள்ளது. மூலவர் சன்னதி முன்பு பிரம்மாண்டமான துவாரபாலகர் மற்றும் பாலகி உள்ளனர். மேலும் வாசலில் முனுப்பசாமியும், இரட்டை குதிரையுடன் துப்பாக்கி ஏந்திய காவலாளியும் உள்ளனர். அதன் காலின் கீழே நாயும், பாம்பும் உள்ளன. மேலும் வனத்தின் பாறையில் அமர்ந்து யாசக முனிவர் தவம் இருப்பது போன்ற சிலையும் உள்ளது. இவை தவிர சிவன், பெருமாள் கருப்பராயனை காப்பது போன்ற தெய்வங்களாக வாசலில் வீற்றிருக்கின்றனர்.  
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி, உடல் நலன், தோட்டங்கள் பாதுகாப்பாக இருத்தல் உள்ளிட்ட சகல விதமான பிராத்தனைகளும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.        
 
    
நேர்த்திக்கடன்:
    
  முக்கிய திருவிழாவாக கிடா வெட்டுதல் உண்டு. மேலும் அங்க வஸ்திரம் சாத்துதல், பிரசாதம் வழங்குதல், மலர் மாலை அணிவித்தல் போன்றவை உண்டு. 
    
 தலபெருமை:
     
  கணபதி பகுதியில் தோட்டங்கள் நிறைந்து காணப்பட்ட காலத்தில் இக்கருப்பராயனை அமைத்தால், தோட்டத்தில் காத்து, கருப்பு ,விச ஜந்துகளிலிருந்து தங்களை காத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. 
 
     
  தல வரலாறு:
     
  கொங்கு நாட்டிலிருந்து, மைசூருக்கு ஒரு காலத்தில் கால் நடை பயணமாக சென்ற ஊர் மக்கள் வனங்கள் நிறைந்த இப்பகுதியை கடந்து சென்று வந்திருந்தனர். பின் ஊர் வளர்ச்சி அடைந்த போது மக்கள் இங்கேயே தங்கள் குடியிருப்புகளை அமைத்தனர். காடுகளை, தோட்டமாக மாற்றிய மக்கள் அதன் நடுவிலேயே குடிசைகளை அமைத்து தங்கினர். ஒவ்வொரு தோட்டங்களும் பல ஏக்கருக்கு பரவி இருந்தன. அதனால் ஒரு குடியிருப்புக்கும் மற்றொரு குடியிருப்புக்கும் இடையே நிறைய இடைவேளி இருந்தன. இக்கட்டத்தில் மக்கள் இரவினில் நடமாடவும், விச பூச்சிகளிடத்திலிருந்து தங்களை காக்கவும் தோட்டத்தின் மத்தியில் இந்த துண்டு தடி கருப்பராயனை மேடையில் அமைத்து வழிபட துவங்கினர். கரிய உருவத்தில் ஒரு கையில் அருவாலும், மறு கையில் துண்டுத்தடியும் ஏந்திய கருப்பராயனை இரவில் பார்த்தால் பொதுமக்களே பயப்படும் நிலை இருந்தது. மேலும் கருப்பராயன் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மணிகள் காற்றில் அசையும் போது, கருப்பராயனே தங்கள் தோட்டத்தில் உலா வருவதாக எண்ணி, மக்கள் பக்தி பரவசத்துடன் மகிழந்தனர். ஒரு கையில் உள்ள அரிவாள் காத்து, கருப்புகளை விரட்டவும், மற்றொரு கையில் உள்ள தடி விசப்பூச்சிகளை ஒழிக்கவும் கருப்பராயன் வைத்துள்ளார் என்று மக்கள் எண்ணம் கொண்டிருந்தனர். மேலும் கருப்பராயன் உடன் அமைக்கப்பட்ட கன்னிமார் தெய்வங்கள் தங்கள் குல பெண்களை காக்கும் என்ற ஐதீகம் இவர்களிடத்தில் உண்டு. பின் இன்றைய கட்டத்தில் 2006 ம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டி, உப தெய்வங்களாக முனியப்பன், சிவன் பெருமாள் போன்றவை அமைத்து கும்பாபிேஷகம் செய்து இன்று வழிபடுகின்றனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கணபதி பகுதியில் தோட்டங்கள் நிறைந்து காணப்பட்ட காலத்தில் இக்கருப்பராயனை அமைத்தால், தோட்டத்தில் காத்து, கருப்பு ,விச ஜந்துகளிலிருந்து தங்களை காத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar