ஆடிப்பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ல் மிகச்சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அமாவாசை, பெளர்ணமி தினத்தன்று விசேஷ பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதம் முதல் வெள்ளி குல பூஜைகள் நடக்கும்.
தல சிறப்பு:
ஆடிப்பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ல் மிகச்சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு 220 வது வருடாந்திர ஆடிப்பொங்கல் திருவிழா 15.8.2018 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் போது, குலபொங்கல் வைத்தல், சக்தி கரகங்கள் புறப்பாடு, ஸ்ரீ உடப்பு செந்தாமரை கருப்பராயன் திருக்கோயிலில் அபிசேகங்கள், வாள் ஏறுதல் மற்றும் கோவில் பிரகாரம் சுற்றி வருதல், மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல், பொது மகா சபைக் கூட்டம் நடைபெற்றது.
திறக்கும் நேரம்:
காலை: 6.00 மணி முதல் 11.30 மணி வரை மாலை: 6.00 மணி முதல் 8.30 மணி வரை.
முகவரி:
அருள்மிகு ஸ்ரீ உடப்பு செந்தாமரை கருப்பராயன் திருக்கோயில், நஞ்சை பாதை, ஸ்ரீபதி நகர், இராமநாதபுரம்,
கோவை - 641045
போன்:
+91 9362929445
பொது தகவல்:
மூலவராக உடப்பு செந்தாமரை கருப்பராயன் உள்ளார். மற்றொரு சன்னதியில் மூலவராக முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். கன்னி மூல கணபதி, கமல விநாயகர், சங்கிலி கருப்பன், சந்தன கருப்பன், 18 ம் படி கருப்பன், பேச்சி அம்மன், கன்னிமார், சக்தி வேல், மயில் வாகனம், குதிரை வாகனம், மூஞ்சூறு வாகனம், பலி பீடம் ஆகியவை உண்டு.
பிரார்த்தனை
குழந்தைபேறு, திருமணமடை, தொழில் வளர்ச்சி மற்றும் எல்லா விதமான பிரச்சனைகளும் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்து ஆகமவிதிப்படி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக, காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், அங்கவஸ்திரம் சாத்துதல் ஆகியவற்றை செய்கின்றனர். குலதெய்வத்திற்கான நேர்த்திக்கடன்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அர்ச்சனைகள், பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது.
தலபெருமை:
250 ஆண்டுகளுக்கு மேலாக பழமையானது. இப்பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்ற கருப்பண்ணசாமி கோவிலாகும்.
தல வரலாறு:
இக்குலமுன்னோர்கள் 250 ஆண்டுகளுக்கு முன்னால், இக்கோயிலை அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. இவ்விடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வற்றாத ஒரு குளம் இருந்தது என்றும், அக்குளத்தில் செந்தாமரைகள் அதிக அளவில் பூத்து இருந்தது என்றும், அதன் நடுவே, இக்கருப்பண்ணசாமி கோவில் அமைத்திருந்ததால், ஸ்ரீ உடப்பு (குளம்)செந்தாமரை கருப்பராயன் கோவில் என்றும் ஒரு தகவல் அளிக்கின்றன. மேலும் இப்பகுதியில் கோயில் அமைத்து நிறுவ சுவாமி சிலையை, இங்கு கொண்டு வரும்போது, சிலை கொண்டு வரப்பட்ட வண்டியின் அச்சு உடைத்து விட்டதால், இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ உடைப்பு செந்தாமரை கருப்பராயன் கோயில் என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் மற்ற தகவல் உண்டு. இவ்விவரங்கள் அனைத்தும் குலமூத்தோர்கள் வாய் மொழியாக கூறியது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:250 ஆண்டுகளுக்கு மேலாக பழமையானது. இப்பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்ற கருப்பண்ணசாமி கோவிலாகும்.
இருப்பிடம் : திருச்சி ரோடு, ராமநாதபுரத்தில் இறங்கி, நஞ்சுண்டாபுரம் செல்லும் பாதையில் ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் பயணித்தால் கோயிலை சென்றடையலாம். மினி பஸ், ேஷர் ஆட்டோ வசதிகள் உண்டு.