புணர்பூச நட்சத்திரத்தில் ராமருக்கு அபிேஷகம், ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தில் அபிேஷகம், ராமனுஜருக்கு திருவாதிரை நட்தரத்தில் அபிேஷகம், ராம நவமி விழா, வார சனிக்கிழமைகள், புரட்டாசி மாத சனிக்கிழமைகள், ஏகாதேசி, அம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகள், அம்மாவாசை, பொளர்ணமி, விநாயகருக்கு பிரதோசம், சதுர்த்தி உள்பட பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
உடையாம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட முதல் ராமர் கோயில் என்ற சிறப்பு பெற்றது. இப்பகுதியில் உள்ள மற்ற கோயில்களில் விழா துவங்குவதற்கு முன் இங்கிருந்துதான் உத்தரவு கேட்டு விழாவை துவங்குகின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை: 6.30 மணி முதல் 8 மணி வரை மாலை: 6 மணி முதல் 8 மணி வரை
முகவரி:
ஸ்ரீ ராமர் கோயில்,
உடையாம்பாளையம்,
கோயம்புத்தூர் - 641028
போன்:
+91 97881 43191
பொது தகவல்:
மூலவராக ஸ்ரீ ராமர்–லட்சுமணன்–சீதா பிராட்டியார் அருள்பாலிக்கின்றனர். தும்பிக்கை ஆழ்வார், ராமானுஜர், வீரமாட்சி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். ராமபிரான் முன்பு ஆஞ்சநேயர் அருள்புரிகிறார்.
பிரார்த்தனை
தொழில் வளர்ச்சி, திருமண தடை, குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நேர்த்திக்கடன்:
அங்கவஸ்திரம், புடவை சாத்துதல், பிரசாதம் வழங்குதல், மாலை சாத்துதல், உழவார பணி மேற்கொள்ளுதல் போன்றவை மூலம் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
நாயக்கர் ஆட்சி காலத்தில் சேர நாடு (இன்றைய கேரளம்) நோக்கி படை எடுத்து சென்ற போது தென் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, நொய்யல் ஆற்றங்கரையில் வெள்ளலுார் பகுதியில் குடியமர்த்தப்பட்ட தேவர் சமுதாய மக்கள் இவர்கள். இவர்கள் போர் வீரர்கள் மற்றும் அரசவை உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ளனர். ஆற்றங்கரை ஒட்டிய பகுதியில் வெத்திலை வியாபாரம் செய்ததால் இவர்கள் வெத்தலை கொடி தேவர் என அழைக்கப்பட்டனர். வெள்லுாரிலிருந்து தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்த இவர்கள் உடையாம்பாளையம் பகுதியில் குடியேறிய அங்கு கட்டப்பட்ட கோயில் இது. பொதுவாகவே தேவர் சமூதாய மக்கள் என்றால் வீரமும், வேகமும் கொண்டவர்கள் என்ற சொல்லுக்கு நேர்மறையானவர்கள். அதாவது, சாப்பாட்டில் கூட அசைவம் இல்லை. சைவம் மட்டும்தான். ராம பிரானை தங்கள் முன்னோர்கள் வழிபட்டதால், அதை தொடர்ந்து இவர்களும் வழிபட்டு வருகின்றனர். சாந்த குணமுடை இவர்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஓட்டு கட்டிடத்தில் அமைத்த கோயில்தான் இன்று, உப சன்னதிகளாக தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், ஆஞ்சநேயர், வீரமாட்சி அமைக்கப்பட்டு, 2006ம் ஆண்டு பெரிய கோயிலாக இப்பகுதியில் உருவெடுத்துள்ளது.
இருப்பிடம் : சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து உடையாம்பாளையத்திற்கு குறிபிட்ட நேரத்தில் பஸ் வசதி உண்டு. திருச்சி ரோட்டிலிருந்து சவுரிபாளையம் மார்க்கமாக மினி பஸ், ேஷர் ஆட்டோக்களில் பயணிக்கலாம். அவிநாசி ரோடு நவ இந்தியா பிரிவிலிருந்தும் இதே போல பயணிக்கலாம்.