அம்மாவாசை, அம்மாவாசை – அன்னதானம், பவுர்ணமி, ஆடி மாத வெள்ளிக்கிழமைகள், ஆடி விளக்கு வழிபாடு, சித்திரை மாத பெருவிழா – பூவோடு எடுத்தல், அழகு குத்துதல், சக்தி கரகம் எடுத்தல் போன்றவை.
தல சிறப்பு:
மழை வேண்டி இக்கோயில் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை: 6 மணி முதல் 10 மணி வரை மாலை: 5 மணி முதல் 8 மணி வரை.
முகவரி:
ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில்,
கணேசபுரம், போத்தனுார்,
கோயம்புத்தூர் - 641023
போன்:
+91 7871241133
பொது தகவல்:
முழு முதற் கடவுள் விநாயகர், முருகர், கோயில் முன்பு சக்தி வேல், கருப்பராயர் சன்னதி, கன்னிமார் சன்னதி, பரிவார தெய்வங்களான ஸ்ரீ விஷ்ணு துர்கை, வைஷ்ணவி, தட்சிணாமூர்த்தி ஆகியவை உண்டு .
பிரார்த்தனை
தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், உடல் நலம் உள்பட சகலவிதமான பிராத்தனைகள் உண்டு.
அருகில் உள்ள பகுதிகளில் மழை பெய்தாலும், போத்தனுார் ரயில்வே லைனை ஒட்டி இருந்த கணேசபுரம் பகுதியில் மழை இல்லாததால், மழை வேண்டி அவ்வம்மன் ஆலயத்தை இப்பகுதி பக்தர்கள் மற்றும் பெரியவர்கள் அமைத்துள்ளனர்.
தல வரலாறு:
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் பெரும் விவசாய பகுதியாக ஒரு காலத்தில் விளங்கிய போத்தனுார் கணேசபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக மழை இல்லாமல் இருந்தது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து, கிணறுகள் வற்றியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வெளியேற துவங்கினர். இப்பகுதி பெண்கள் கொடுக்கவும் பலர் தயங்கினர். இதையடுத்து இப்பிரச்சனையை தீர்க்க முடிவெடுத்த மக்கள், இறைவனை வழிபட துவங்கினர். உடனே இங்கு மேடை அமைத்து, சுயம்பு அம்மனை அமைத்து வழிபட துவங்கினர். இவர்களது பக்தியில் மெச்சிய அம்மன் உடனே இப்பகுதியில் மழை பெய்ய அருள் வழங்கியதாக பெரியவர்கள் இன்றும் கூறுகின்றனர். இதையடுத்து பல ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள் உதவியுடன் சிறு மூலவர் சன்னதி அமைத்து அம்மனுக்கு உருவம் கொடுத்து வழிபட்டனர். பின் 1991ம் ஆண்டு விநாயகர், முருகர், கருப்பராயர், கன்னிமார் உள்பட பரிவார தெய்வங்கள் அமைக்கப்பட்டு, முதல் கும்பாபிஷேக விழா நடந்தது. பின் துவார சக்திகள், முன் மண்டபம், கோபுரம் ஆகியவை கட்டப்பட்டு, 2005 ம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் பிரம்மாண்ட முறையில் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மழை வேண்டி இக்கோயில் கட்டப்பட்டது.
இருப்பிடம் : உக்கடத்திலிருந்து போத்தனுாருக்கு அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன. ஆனால் கணேச புரம் செல்ல ஷேர் ஆட்டோ வசதி மட்டுமே உள்ளது. பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனாரி ரயில்வே பாலத்தின் அருகில் இறங்கி, அங்கிருந்தும் ஆட்டோவில் பயணிக்கலாம்.