விநாயருக்கு உரிய பிரதோசம், சதுர்த்தி உள்பட அம்மனுக்கு உரிய ஆடி வெள்ளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை விழாக்கள், குரு பெயர்ச்சி விழா போன்றவை கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
மாணவர்களின் கல்வி நலனுக்காக அமைக்கப்பட்ட கோவில்.
திறக்கும் நேரம்:
காலை: 7 மணி முதல் 11 மணி வரை மாலை: 6 மணி முதல் 7 மணி வரை
முகவரி:
அக்ஷயா பொறியியல் கல்லுாரி வளாகம்,
பகவதி பாளையம், கிணத்துகடவு,
கோயம்புத்தூர் - 642109
போன்:
+91 99430 96848
பொது தகவல்:
மூலவர் கல்வி கணபதியுடன், மூச்சூறு வாகனம், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணா மூர்த்தி, மகா விஷ்ணு, விஷ்ணு துர்கா, பதுமைகள், காவல் தெய்வம் ஆகியன உள்ளன.
பிரார்த்தனை
கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் இங்கு நன்கு கல்வி கற்று, வேலை கிடைக்க பிராத்தனை செய்கின்றனர். மேலும் சரஸ்வதியும் உள்ளதால் முழுக்க, முழுக்க மாணவர்கள் கல்வி பிராத்தனைக்காக இங்கு வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
மாணவர்கள் தாங்கள் விரும்பியபடி சப்ஜெட்டில் பாஸ் செய்தாலோ, அதிக மதிப்பெண் எடுத்தாலோ., விநாயகருக்கு அங்கவஸ்திரம், மாலை சாத்துதல், சரஸ்வதிக்கு பட்டு சாத்துதல், பிரசாதம் வழங்குதல் போன்றவை.
தலபெருமை:
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு கடவுளே தன்னம்பிக்கையும், ஊக்கமும் தருவார் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயில் இது.
தல வரலாறு:
பள்ளிக்கூடம் போகமா, பாடம் படிக்காம, நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே, அதுக்கு உனக்கு எத்தனை தேங்காய் வேணும் என்ற திரைப்பாடலுக்கு இணங்க கல்வி கற்கும் மாணவர்களுக்கும், கணபதிக்கும் ஆதிகாலம் முதலே தொடர்பு உண்டு. அதற்கு ஏற்ப கோவை கிணத்துகடவில் 2009ம் ஆண்டு உருவான அக்ஷயா கல்லுாரி வளாகத்தில் சிறு மேடையில் உருவான கல்வி கணபதி, மாணவர்களின் பெரும் முயற்சியால் இன்று மிகப்பெரிய கோயிலாக உருவெடுத்துள்ளது. இக்கல்லுாரி கிராமப்புற மாணவர்களை அதிகம் கொண்டதால், நுழைவு வாசலில் இருந்த இந்த கல்வி கணபதி வணங்கிய பின்பே மாணவர்கள் கல்லுாரிக்குள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பின் தேர்வுக்கு செல்லும் போது ஹால் டிக்கெட்டை வைத்து வழிபட்டும், கேம்பஸ் இன்டர்வியு நடக்கும் போது வேண்டுதல் வைத்து சென்ற மாணவர்களுக்கு வேலை கிடைத்ததும் இந்த மாணவர்களுக்கு மேலும் இந்த கணபதி மேல் அதிக பற்றை ஏற்படுத்தியது. இப்படி படிப்படியாக இந்த கல்வி கணபதியின் புகழ் மாணவர்களிடையே பரவியதை அடுத்து, கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் உதவியுடன் 2014 ம் ஆண்டு கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலட்சுமி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்கா, தட்சிணா மூர்த்தி உள்பட காவல் தெய்வங்கள் அமைக்கப்பட்டு, சிரவை ஆதினம் குமரகுருபர அடிகள் மற்றும் பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசல அடிகள் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு கடவுளே தன்னம்பிக்கையும், ஊக்கமும் தருவார் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயில் இது.