கோயில் வாசலில் வழி நடை பிள்ளையார், ஆதி சிவன்–(மல்லேஸ்வரன்), சக்தி வேல், செல்வ விநாயகர், சிம்ம வாகனம், பலி பீடம் ஆகியவை உண்டு. செல்வ விநாயருக்கும், வழி நடை பிள்ளையாரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
திருமண தடை, தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்பட சகல விதமான பிராத்தனைகளுக்கும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு புடவை சாத்துதல், அபிேஷகம் வழங்குதல், அழகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை உண்டு.
மலைகள் சூழ்ந்த தடாகம் பகுதியில் ராமநாதபுரம் எனும் சிற்றூரில் இக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்கள் அரச மரத்தின் கீழே சிறு மேடை அமைத்து, ஆதி சிவனை (மல்லேஸ்வரன்–அதாவது மலை பகுதியை சேர்ந்த சிவன்) சுயம்பு வடிவில் அமைத்த வழிபட்டனர். பின் அரச மரத்தின் அருகே ரோட்டை ஒட்டி வழி நடை பிள்ளையார் சிறிதாக அமைத்து அதையும் அவ்வழியே செல்லும் போது வழிபட்டனர். பின் அப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரின் கனவில் வன அம்மன் தோன்றி தான் துார தேசத்தை சேர்ந்தவள் என்றும் இருப்பிடம் இல்லாமல் இருக்கிறேன் என்றும், என்னை வழிபட்டால் இன்னல்களில் இருந்து உங்களையும், உங்கள் பகுதியை சேர்ந்தவர்களையும் காப்பேன் என்றும் கூறியதையடுத்து, ஆதி சிவன் அருகே சிறு மேடையில் சுயம்பு அம்மனை உருவெடுத்து வழிபட துவங்கினர். பின் 1985ம் ஆண்டு பக்தர்கள் உதவியுடன் கோயில் அமைத்து, அம்மனுக்கும் உருவம் கொடுத்து, செல்வ விநாகயர் சன்னதி அமைத்தும் இன்று வரை வழிபட்டு வருகின்றனர். பின் 1997 ம் ஆண்டு மறு சீரமைக்கப்பட்டது. இது அனைவரும் வழிபடும் பொது கோயிலாக இன்றும் உள்ளது.
இருப்பிடம் : கோவை மேட்டுப்பாளையம் ரோடு துடியலுாரிலிருந்து, பன்னீர் மடை வழியாகவும் செல்லலாம். கணுவாய் வழியாகவும் இவ்வூருக்கு செல்லலாம். கோவை ரயில் நிலையத்திலிருந்தும், காந்திபுரத்திலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே போக்குவரத்து வசதி உள்ளது.