Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சொர்ணலக்ஷ்மி நரசிம்மர்
  உற்சவர்: ஸ்ரீ தேவி பூதேவி, பிரகலாதவரதர்
  அம்மன்/தாயார்: அமிர்தவல்லி நாச்சியார்
  தல விருட்சம்: பவளமல்லி
  புராண பெயர்: பாஞ்சராத்ரமம்
  ஊர்: கோனார்பாளையம்
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி நவராத்தியில் திருக்கல்யாணம். மார்கழியில் அனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்திரை மாதம் ஸ்வாதி நட்சத்திரம் அன்று திருக்கல்யாணம், மற்றம் மாதாந்திர சிறப்பு நாட்கள் விமர்சையாக நடக்கின்றன.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் மேற்கு நோக்கிய பஞ்சலோக விக்ரகத்தினாலான திருமேனி. மூலஸ்தானத்தின் கிழக்கே நடுநாயகமாக கருப்பண்ண சுவாமியும் வலதுபுறம் பால கிருஷ்ணனும் இடதுபுறம் ஆஞ்சநேயரும் வடக்கே பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் கிருஷ்ணரும் அழகுற காட்சி தருகின்றனர். மேலும் சக்ரத்தாழ்வார் யோக நரசிம்மரும் உள்ளனர். தெற்கே உடையவர் ஸ்ரீ இராமனுஜர், விநாயகர், சப்த கன்னிகள், ராகு கேதுவும், பரிவார தெய்வங்களாக வடக்கே லக்ஷ்மி -ஹயக்கீரிவர், தெற்கே லக்ஷ்மி வராகரும், மேற்கில் கருடாழ்வாரும், கிழக்கில் கருப்பண்ண சுவாமியும் காட்சி தருகிறார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.45 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 4.00 முதல் 7.00 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் கோவில், யாதவா நகர், குருவரரெட்டீயூர், கோனார்பாளையம்*சந்தப்பேட்டை சாலை, கோனார்பாளையம் – 638504, ஈரோடு.  
   
போன்:
   
  +91 96773 47615 
    
 பொது தகவல்:
     
  ஒரு கால நித்ய படி பூஜையும் பிரதி மாதம் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று சுதர்சன ஹோமமும் திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்க சுவாதியில் சிறப்புபூஜை செய்யப்படுகிறது. வடக்கு நோக்கிய உடையவர் ஸ்ரீ இராமனுஜருக்கு பிரதி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று பாலாபிஷேகம் செய்வதால் ராகு*கேது தோஷம் நிவர்த்தியாகும். நாகதோஷம் உள்ளவர்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இராகு காலத்தில் நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழி படுவதால் தோஷம் நீங்கும். கல்வியிலும், தொழிலிலும் முன்னேற புதன் கிழமைகளில் 54 ஏலக்காய்கள் கொண்ட மாலையை ஸ்ரீ லக்ஷ்மி -ஹயக்கீரிவருக்கு அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். நிலம் தொடர்பான சங்கடங்கள் தீர ஸ்ரீ லக்ஷ்மி வராகருக்கு கோரை கிழங்கு மாலை சாற்றி வழிபடுவதால் சங்கடங்கள் விலகுகின்றன. 
    
நேர்த்திக்கடன்:
    
  சொர்ணலக்ஷ்மி நரசிம்மருக்கு வெண் சாமரமும், மணியும் செலுத்தி நேர்த்திக்கடன் நிறேவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  மந்திரம் தந்திரம் யந்திரம் ஓளஷதம் போன்ற சத்ரு பயம் , எதிரி தொல்லைகளிலிருந்து விடுபட பிரதி சுவாதி அன்று நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் கலந்து கொண்டால் எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் உடனடி நிவர்த்தி கிடைக்கும்.  
     
  தல வரலாறு:
     
  பக்தர்கள் அமிர்தவல்லி தாயாரை அங்குள்ள கருப்பண்ண சுவாமி கோயிலின் மேற்கே ஒரு குடில் வைத்து வழிபட தொடங்கினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் கோயிலை நிர்வகிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர் ஒருவருடைய கனவில் தோன்றிய தாயார் என்னைத் தனியாக வைத்து வணங்க வேண்டாம் என்று சொன்னதால் பிரசன்னம் பார்த்து பிறகு ஸ்ரீ மாலோல நரசிம்மர் பஞ்சலோக விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து ஸ்ரீ சொர்ணலக்ஷ்மி நரசிம்மராக வழிபட தொடங்கினார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் மூலவரின் மீது அவர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் சூரியன் ஒளி திருமுகத்திலும், திருவடியிலும் படர்கிறது. இது இங்கு காணப்படும் சிறப்பம்சமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar