இம்மை அம்மை என இரண்டும் இவை மெய்ம்மை தான் அறியாது விளம்புவர் மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை வம்மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே.
-திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 62வது தலம்.
திருவிழா:
வைகாசி விசாகம், மாசி மகம்.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 125 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 - இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்,
அன்னியூர்- 612 201. திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91- 435-244 9578
பொது தகவல்:
முன்மண்டபத்தில் நால்வர் சன்னதி, வலப்பால் அம்பாள் தரிசனம், சிறிய திருமேனி, நேரே மூலவர், துவராபாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசயாகவுள்ளன. பக்கத்தில் ஆலமர் கடவுள் உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன.
பிரார்த்தனை
திருமணத்தில் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து, திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நைவேத்யம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.
தலபெருமை:
பார்வதி தேவி காத்தயாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். றைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நைவேத்யம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.
கட்டடம் கட்டுதவதில் தாமதம் ஏற்பட்டால், 7 செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால் தடையின்றி கட்டலாம் என்பது ஐதீகம். இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.
தல வரலாறு:
சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை.
யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், இத்தலம் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்க பெற்றான். வன்னி என்றால் அக்னி என்று பொருள்.
அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் அன்னியூர் ஆனது. இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் : கும்பகோணத்திலிருந்து (24 கி.மீ.) காரைக்கால் செல்லும் பஸ்களில் எஸ்.புதூரில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஆட்டோக்களில் 5 கி.மீ. சென்றால் வன்னியூரை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி : கும்பகோணம்
கிரீன் பார்க் +91-435-240 3912-13-14. செல்லா +91-435-243 0336 ஆதித்யா +91-435-242 1794-95 லீ கார்டன் +91-435-240 2526 ராயாஸ் +91-435-243 2032 பாரடைஸ் +91-435-241 6469.