திருவிழாக்கள் இல்லாத தலம்: மகரிஷி இறந்த பின், பரிகாரத்திற்காக கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்குள்ள சிவன், எந்த திருவிழாக்களையும் கொண்டாடாமல் இருக்கிறார். மகரிஷி இறந்த சோக சம்பவத்தை நினைவுகூறும்விதமாக இங்கு சிவனுக்குரிய சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை. வைகாசியில் தத்தாத்ரேயருக்கு குருபூஜை மட்டும் நடக்கும்.
தல சிறப்பு:
தத்தாத்ரேயருக்குரிய தனி கோயில்
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படுகிறது.
முகவரி:
அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில்,
கொழுமம், குமாரலிங்கம்- 642 204.
பொள்ளாச்சி.கோயம்புத்தூர் மாவட்டம்.
போன்:
+91- 4252 - 278 831
பொது தகவல்:
பிரகாரத்தில் விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மன், பைரவர், சந்திரன், சூரியன் ஆகியோர் உள்ளனர். சிவன் சன்னதி முன்பு, மகரிஷி தவம் செய்த இடத்தில், சிறிய பீடத்துடன் தியான மண்டபம் உள்ளது. இத்தல விநாயகரின் திருநாமம் சுந்தர கணபதி.
பிரார்த்தனை
மனஅமைதி கிடைக்க தியானம் செய்து, இறைவனை வேண்டிக் கொள்ளலாம். மாணவர்கள் ஞாபகதி வேண்டி இங்கு தியானம் செய்யலாம்.
நேர்த்திக்கடன்:
வஸ்திரங்கங்கள் சாத்தி, விசேஷ அபிஷேகங்கள் செய்யலாம்.
தலபெருமை:
திருவிழாக்கள் இல்லாத தலம்: மகரிஷி இறந்த பின், பரிகாரத்திற்காக கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்குள்ள சிவன், எந்த திருவிழாக்களையும் கொண்டாடாமல் இருக்கிறார். மகரிஷி இறந்த சோக சம்பவத்தை நினைவுகூறும் விதமாக இங்கு சிவனுக்குரிய சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை. வைகாசியில் தத்தாத்ரேயருக்கு குருபூஜை மட்டும் நடக்கும்.
தியான தலம்: மகரிஷியின் பெயரால், இங்குள்ள சிவன் "தத்தாத்ரேயர்' என்றே அழைக்கப்படுகிறார். இங்கு தியானம் செய்தால் மனம் ஒருமை அடையும். இறைவனை வேண்டி தவம் செய்திட கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அமைதியான இத்தலத்தில், சிவன் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கி கையில் சவுந்தரமலருடனும் அருளுகின்றனர்.
தல வரலாறு:
ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார்.மகரிஷி மரண நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி, ""நான் உன்னை மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார்."பரிகாரம் யாது செய்தால் எனது பாவம் நீங்கும்?' என்று மன்னர் கேட்க, ""இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்,'' என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர், சிவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தத்தாத்ரேயருக்குரிய தனி கோயில்.
இருப்பிடம் : கோயம்புத்தூரிலிருந்து 87 கி.மீ., உடுமலையிலிருந்து 18 கி.மீ., பழநியிலிருந்து 21 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
உடுமலைப் பேட்டையிலிருந்து அடிக்கடி பஸ்கள் உள்ளன.