Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீநிவாசப்பெருமாள்
  தீர்த்தம்: கோனேரிதீர்த்தம்
  புராண பெயர்: திருமலை
  ஊர்: திருவண்ணாமலை
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி மாதம் சனிக்கிழமை, புரட்டாசி சனி வாரம், மாதாந்திர சனி உற்சவம்  
     
 தல சிறப்பு:
     
  தென்திருப்பதி என்ற பெருமை பெற்றது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை- விருதுநகர் மாவட்டம்  
   
போன்:
   
  +91 4563 260254 
    
 பொது தகவல்:
     
  மலை மீது அமைந்துள்ள கோயிலின் அழகு தோற்றம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. கோயிலுக்‌கு முன்பாக உள்ள தடாகம் அற்புதமாக உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணகாரியம், குழந்தை பாக்கியம், வியாபார விருத்தி, விவசாய செழி்ப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். இவை தவிர உத்தியோக உயர்வு வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக்‌கொண்டால் கண்டிப்பாக நடப்பதாக கூறுகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  முடி இறக்குதல், கால்நடைகள் தானம் தருதல் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். காணிக்கையாக ஆடு, மாடுகளும் பொன்னாலும், ‌வெள்ளியாலும் செய்யப்பட்ட பலகார உருப்படிகள், பாத்திரங்கள், பரிவட்டங்கள், பணம் முதலியன செலுத்தப்படுகின்றன. 
    
 தலபெருமை:
     
  திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம்  
     
  தல வரலாறு:
     
  இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களை ரட்சிக்க வேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களை காக்கும் பொருட்டு திருவேங்கடமுடயனாகத் தானே தோன்றி நிற்கிறார். சகல ஜனங்களுக்கு அவரவர் விரும்பும் பலன்களைக் கொடுத்துக் கொடுத்து எழுந்தருள உள்ளார்.  அம்மலையின் அடிவாரத்தில் தாமரை முதலிய மலர்கள் நிறைந்த பம்பை என்கிற புண்ணிய தீர்த்தமும் உள்ளது. அது சகல பாவத்தையும் போக்கி சகல விருப்பத்தையும் கொடுக்க வல்ல மகிமையுடையது. அதை கோனேரி தீர்த்தம் என்றும் அழைப்பார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar