தைப்பூசம் 12 நாள் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, அட்சய திருதியை, கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, மண்டல பூஜை.
தல சிறப்பு:
இந்தக் கோயிலை திறக்கும்போது, ஒரு வித்தியாசமான வழக்கம் பின்பற்றப்படுகிறது. கோயில் திறக்கும் முன் கோயில் மணி அடிக்கப்படும். அதன்பிறகே சிறிது நேரத்திற்கு நடை திறப்பர் என்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை திறந்திருக்கும்.
இங்கு கணபதி, சுப்பிரமணியர், தர்மசாஸ்தா, நாகர் சன்னதிகளும், ஒரு தூணில் ஆஞ்சநேயரும் உள்ளனர். யானை கட்டும் இடத்தில் யானைக்கு காவலாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
உடல்நலத்தால் பாதிக்கப்படுபவர்கள், விபத்தால் பாதிக்கப்படுபவர்கள் குணமாக இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றியும், கோமதி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி, அரளிப்பூ மாலை அணிவித்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சத்தியவாகீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கும், கரமனை சத்தியவாகீஸ்வரர் கோயிலுக்கும் தொடர்பு உண்டு என தல வரலாறு கூறுகிறது. இவை சமகாலத்திய கோயில்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இங்குள்ள கோமதி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி, அரளிப்பூ மாலை அணிவித்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் பிழைத்துக் கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது. நவராத்திரி காலங்களில் அம்மனுக்கு நடத்தப்படும் லட்சார்ச்சனையில் பங்கேற்பதன் மூலம் வாழ்வில் அனைத்து புகழையும் பெற முடியும்.
நெற்பறை காணிக்கை: தைப்பூசத்தன்று சத்தியவாகீஸ்வரர் மற்றும் கோமதிக்கு கரமனை ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது. பின் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. அப்போது, பக்தர்கள் நெற்பறை எனப்படும் காணிக்கை அளிக்கின்றனர். நெல் அல்லது அரிசியை பத்து படி (15 கிலோ) அளிப்பது வழக்கம். இந்த அரிசியை வாங்க கோயிலிலேயே செம்பால் ஆன பறை என்னும் பாத்திரம் வைத்துள்ளனர். இந்த அரிசி அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. சுவாமிக்கு காணிக்கை செலுத்துவதன் மூலம் விளைநிலங்களில் விளைச்சல் அதிகரிப்பதாக நம்பிக்கையுள்ளது.
நந்திக்கு வெள்ளை மாகாப்பு: கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க தைப்பூசநாளில் இங்குள்ள நந்திக்கு வெள்ளை மாகாப்பு சாத்தப்படுகிறது. வெப்ப நோய் நீங்க சுவாமிக்கு ஜலதாரை வழிபாடு செய்கின்றனர். லிங்கத்தின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு அதில் புனித நீர் நிரப்பப்பட்டு சொட்டு சொட்டாக சுவாமி மீது விழும் வழிபாடே ஜலதாரையாகும். ஒவ்வொரு தமிழ் மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு அமைகிறது.
கோயில் மணி ஓசை: இந்தக் கோயிலை திறக்கும்போது, ஒரு வித்தியாசமான வழக்கம் பின்பற்றப்படுகிறது. கோயில் திறக்கும் முன் கோயில் மணி அடிக்கப்படும். அதன்பிறகே சிறிது நேரத்திற்கு நடை திறப்பர்.
தல வரலாறு:
இன்றைய திருவனந்தபுரம், ஒரு காலத்தில் அனந்தன் காடு என அழைக்கப் பட்டது. இங்குள்ள ஆற்றங்கரையில், கர மகரிஷி என்பவர், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். ஒரு கட்டத்தில், அந்த ஆற்றுக்கே அந்த மகரிஷியின் பெயர் சூட்டப்பட்டு கரமனை ஆறு எனப்பட்டது. பிற்காலத்தில், அந்த லிங்கத்துக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒரு சமயம், ஆற்றில் தண்ணீர் வற்றி பஞ்சம் ஏற்பட்டது. அர்ச்சகரின் கனவில் தோன்றிய அசரீரி, அந்த இடத்தில் சிவலிங்கம் மிகுந்த உக்கிரத்துடன் விளங்குவதால், அருகில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரை குளத்தில் அம்பாள் சிலை ஒன்று மூழ்கிக் கிடக்கிறது. அதை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும், என்றது. இதுபற்றி, அர்ச்சகர் மன்னரிடம் தகவல் தெரிவித்தார். அவரது உதவியுடன் மதுரை வந்து, பொற்றாமரை குளத்தில் மூழ்கிக் கிடந்த அம்பாள் சிலையை எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்தார். இந்தச் சிலையே, மீனாட்சியம்மன் கோயிலுக்காக செய்யப்பட்ட முதல்சிலை என்பது ஒரு கருத்து. இதையடுத்து ஆற்றில் தண்ணீர் வரத்துவங்கியது. பஞ்சம் நீங்கியது. இங்குள்ள சிவலிங்கத்துக்கு சத்தியவாகீஸ்வரர்
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்தக் கோயிலை திறக்கும்போது, ஒரு வித்தியாசமான வழக்கம் பின்பற்றப்படுகிறது. கோயில் திறக்கும் முன் கோயில் மணி அடிக்கப்படும். அதன்பிறகே சிறிது நேரத்திற்கு நடை திறப்பர் என்பது தலத்தின் சிறப்பு.