41 நாட்கள் விரதமிருந்து அம்மனைக் குறித்து பாடல்கள் பாடினால் தோஷங்கள் விலகும் என்று உள்ளது இங்குள்ள சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில்,
கிழக்குக் கோட்டை, திருவனந்தபுரம்
கேரள மாநிலம்.
போன்:
+91 471- 246 1037, 245 5204, 94474 00300
பொது தகவல்:
நவக்கிரகம், ரக்தசாமுண்டி, பிரம்மராட்சஸ், மாடன் தம்புரான் சிலைகள் இங்குள்ளன. கர்ப்பகிரகத்தை 17 யானை, ஆறு சிங்க சிலைகள் சுமக்கின்றன. கர்ப்பகிரகத்திற்கு மேலே மும்மூர்த்தி தேவியர், கங்கையுடன் கூடிய சிவன் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை
இங்குள்ள நாகராஜா சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது. ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் நாகராஜாவை வழிபட்டு நிவாரணம் பெறலாம். அம்பாள் சன்னதியில் உள்ள யோகீஸ்வரரை வணங்கி, அங்கு வழங்கப்படும் விபூதியை தரிசித்துக் கொண்டால் பால பீடைகள் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகுமென்ற நம்பிக்கை உள்ளது.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள தேவிக்கு வஸ்திரம், அரளிப்பூ சாத்தி, வெடி வழிபாடு செய்கின்றனர். மேலும் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
தோற்றப்பாட்டு: இக்கோயிலில் மாசி மாத மிருகசீரிட நட்சத்திரத்தன்று துவங்கும் திருவிழா விசேஷம். துவக்கநாளில், குரல்வளமுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் தோற்றப்பாட்டு என்னும் மலையாள கீதம் இசைக்கின்றனர். அம்பாள் தோன்றிய விதம் இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்டாலே, நமது பாவங்களும், பீடைகளும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாடலைப் பாடுவோர் 41 நாட்கள் விரதமிருந்து வருகின்றனர். நாகதோஷ வழிபாடு: கோயிலின் வெளிப்புறத்தில் அரசமரம், செண்பகமரம் மற்றும் செடி கொடிகள் நிற்கின்றன. இதை சர்ப்பக்காவு என்கின்றனர். இங்கு ஆறு அடி உயர பாம்பு சிலை உள்ளது. இதை நாகராஜா என்கின்றனர். இந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது. ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் நாகராஜாவை வழிபட்டு நிவாரணம் பெறலாம். அம்பாள் சன்னதியில் உள்ள யோகீஸ்வரரை வணங்கி, அங்கு வழங்கப்படும் விபூதியை தரிசித்துக் கொண்டால் பால பீடைகள் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகுமென்ற நம்பிக்கை உள்ளது. தேவிக்கு வஸ்திரம், அரளிப்பூ சாத்தி, வெடி வழிபாடு செய்கின்றனர்.
கன்னி பூஜை: பெண் குழந்தைகளுக்கு வியாதி அல்லது இதர காரணங்களால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டாலோ, அவர்களின் கல்வி, எதிர்காலத்தில் நல்ல கணவன் அமைவது போன்ற காரணங்களுக்காகவோ இந்த அம்பாளை வேண்டி கன்னி பூஜை நடத்தலாம். மாசி மாத ஆறாம் திருவிழா இரவில் நடக்கும் அத்தாழ பூஜையின் போது, இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பெண் குழந்தைகளை தேவி போல் வேடமிட்டு பூஜை செய்கின்றனர். இதேநாளில், சுமங்கலிகளின் தாலி பாக்கியத்திற்காக அஷ்ட மாங்கல்ய பூஜையும் நடக்கிறது. அன்று இரவு ஒரு மணிக்கு ஸ்ரீபூதபலி என்ற பூஜை நடக்கிறது. அம்மன் அருள் பெற்ற பூஜாரி தன்னுடைய பாதங்களில் சிலம்பு அணிந்து, திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி, வாளுடன் பின்நோக்கி நடந்து சென்று பூதகணங்களுக்கு பலியிடுகிறார்.
பஞ்சபூத பொங்கல்: மாசித் திருவிழாவின் ஏழாம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று பொங்கல் விழா விசேஷம். பழஞ்சிறை தேவியை பொங்கல் பிரியை என்றே சொல்லலாம். மேலும், அருமையான ஒரு தத்துவமும் இந்தப் பொங்கலின் மூலம் பக்தர்களுக்கு உணர்த்தப்படுகிறது. பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள். பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்து தயாரிக்கப்படும் பானைகளில், கைக்குத்தலரிசியை போடுகிறார்கள். பானையில் நீர் விட்டு, மூன்றாவது தத்துவமான அக்னியால் வேகவைக்கிறார்கள். காற்று வீசும்போது நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. மேலும், வாயு தத்துவத்தை உணர்த்தும் வகையில் நாமசங்கீர்த்தனம் செய்யப்படுகிறது. மக்கள் பழஞ்சிறை தேவி சரணம் என்று பிரார்த்திக்கவும் செய்கின்றனர். இந்த புனித மந்திர ஒலி காற்றில் பரவுகிறது. ஐந்தாவது தத்துவமாகிய ஆகாய மார்க்கமாக பொங்கல் பானைகள் மீது பூக்கள் தூவப்படுகிறது. வெட்டவெளியில் பொங்கல் வைப்பதையும் ஆகாய தத்துவத்துக்கு ஒப்பிடலாம்.
தல வரலாறு:
மலைநாட்டிலுள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இங்கு ஓடிய நீலாற்றங்கரையில் யோகீஸ்வரர் என்ற முனிவர், தேவியின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். தேவி அவர் முன்தோன்றி, இங்கு என்னை பிரதிஷ்டை செய்க, என்று கூறி மறைந்தாள். முனிவரும், தனக்கு அம்பாள் எந்த வடிவில் காட்சி தந்தாளோ, அதன்படியே சிலை வடித்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் காடு அழிக்கப்பட்டு அவ்விடத்தில் சிறைச்சாலை கட்டப்பட்டது. அதுவும் காலப்போக்கில் அழிந்து விட்டது. இதனால், இப்பகுதி பழஞ்சிறை எனப்படுகிறது. கோயிலைக் கட்டிய யோகீஸ்வரரின் சிலை அம்பாள் முன்பு உள்ளது. கொடுங்கல்லூர் தேவியின் அம்சமாக பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:41 நாட்கள் விரதமிருந்து அம்மனைக் குறித்து பாடல்கள் பாடினால் தோஷங்கள் விலகும் என்று உள்ளது இங்குள்ள சிறப்பு.