விநாயகர் சதுர்த்தி, சதுர்த்தி, வருடப் பிறப்பு, சங்கடஹரா சதுர்த்தி
தல சிறப்பு:
இங்கு விநாயகர் ஐந்து தலைகளுடன் பத்து கைகளுடன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பஞ்சமுக விநாயகர் திருக்கோயில்
புளிச்சக்குளம், விருதுநகர்.
போன்:
+91 94420 59421
பொது தகவல்:
பத்து கைகளோடு, ஒவ்வொரு கையிலும் வில் அம்பு, திரிசூலம் என, காட்சி தருகிறார் விநாயகர்.
பிரார்த்தனை
திருமண தடை உள்ள நபர்கள், இவ் விநாயகரை வணங்க, திருமண தடை நீங்குகிறது.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
பொதுவாக விநாயகர் சிலையை, அமர்ந்த நிலையில், ஒரு முகத்தோடுதான் பார்த்திருப்போம். இங்கு நின்ற நிலையில், ஐந்து முகத்தோடு காட்சி தருகிறார் பஞ்சமுக விநாயகர். இதை இப்பகுதியினர், பக்தியுடன் வழிபடுகின்றனர்.
தல வரலாறு:
முத்துராமலிங்கத் தேவர், பாபாநாசம் நதிக்கரையில் குளித்து விட்டு வருகையில், அங்கே இந்த சிலையுடன் இருந்த ஒருவர், இதை உருவாக்க கூறிய நபர் வரவில்லை. நீங்களே எடுத்துச் சென்று வழிபடுங்கள், என, கூறி உள்ளார். இந்த சிலை, 1959ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் நிறுவப்பட்டு, இன்று, அவரது சகோதரி குடும்பத்தினரால், வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், விநாயகருக்கு அருகே உள்ள, ஐந்து தலை நாகர் சிலையானது, பசும்பொன் என அழைக்கப்படும் தவசி குறிச்சியில், சித்தர் ஒருவரால் வழங்கப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு விநாயகர் ஐந்து தலைகளுடன் பத்து கைகளுடன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.