இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலில் விநாயகர், தண்டாயுதபாணி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் மகா மண்டபம், காத்தவராயன், ஆரியமாலா கருப்பழகியுடன் அருள்பாலிக்கிறார்கள், பலி பீடம் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணதடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், உடலில் பினி நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
இக்கோயிலுக்கு அருகில் உமா மகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஐய்யனார், சித்தி விநாயகர், சிரவிநாயகர் என பல கோயில்கள் அமைந்திருப்பது சிறப்பு. இங்கு குல தெய்வ வழிபாட்டிற்காக பல பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அனைத்து கோயில்களையும் தரிசித்து செல்வது மேலும் சிறப்பு.
தல வரலாறு:
இக்கோயில் சோழ வம்சத்தினர் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். கால போக்கில் சிதலமடைந்ததால் அப்பகுதி மக்கள் இக்கோயில் அறநிலைதுறையிடம் ஒப்படைத்துவிட்டனர். முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடந்து வருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள அம்மன் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூர்- கும்பகோணம் சாலையில் 10 கி.மீ., தொலைவில் எட்டியலூர் உள்ளது. வெட்டாற்றுப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளே 2 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி,சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020.