மேற்குப்பக்கம் வாயிலில் மகா மண்டபத்தில் 50 பேர் அமரும் இடவசதி ஹரிகரபுத்திரன் பூரணகலா மற்றும் புஷ்பக்கலாடுன் மேற்குபக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றார். வடக்குப் பக்கம் வீரன், எதிரில் தல விருட்சம் உள்ளது. வடக்குப்பக்கம் வாயிலில் 10 தூண்கள் அமைக்கப்பட்ட மகா மண்டபத்தில் வடக்குபக்கம் பார்த்த வகையில் பொன்னியம்மன் அருள்பாலிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகரும் வடக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கிறார். 500-1000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. கிராம தேவதை மற்றும் கிராம காவல்தெய்வமாக அப்பகுதியினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். 2008ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும், புது தானியங்கள், ஆடு, கோழி உயிருடன் காணிக்கை யாக செலுத்துகின்றன.
தலபெருமை:
மஞ்சக்குடி பஸ் நிலையத்தின் அருகில் சோழ சூடாமணி ஆற்றின் வடக்கே ஒரு கி.மீ., தொலைவில் பாõம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜ யேஸ்வரர் கோயில் அருகில் இக்கோயில் உள்ளது. சீனுவாச பெருமாள், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கிறது. இங்குள்ள விக்கிரகங்கள் அனைத்துக்கும் எல்லாவிதமான அபிஷேகம் செய்யப்படுகின்றன.
தல வரலாறு:
500-1000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகவும் மன்னார்காலத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வயல் சூழ்ந்த பகுதியில் கோயில் உள்ளது. காவல் தெய்வமாக பொன்னியம்மனும், எல்லை தெய்வமாக (ஐயனார்) ஹரிஹர புத்திரனும் அருள்பாலிக்கின்றனர். சிறிய கொட்டகையாக இருந்ததை கிராமத்தினர் வரி வசூல் செய்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். கடந்த 2008ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பலரும் குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள தலவிருட்சமரத்தில் பூ பூக்காமல் கனி காய்காமல் உள்ளது சிறப்பம்சமிக்கது.
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 18 கி.மீ., தொலைவில் நார்சிங்கம் பேட்டை உள்ளது. மஞ்சக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி சோழ சூடாமணி ஆற்றின் பாலத்தின் வழியாக அரை கி.மீ., தொலைவில் வடக்கே கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் மற்றும் கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020