கோயில் கிழக்கு பக்கம் வாயிலில் உள்ளது. பெரிய நாயகி அம்மன் மேற்கு பக்கம் பார்த்தவண்ணம் அருள்பாலிக்கிறார். எதிரில் பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. மகாமாரியம்மன், காளியம்மன் இரண்டும் அக்கா, தங்கையாக பாவித்து ஒரே காம்பவுண்ட் சுவரில் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயிலில் மண்டபம் என மொத்தத்தில் பத்து கலசங்கள் உள்ளது. காத்தவராயன், ஆரியமாலா, கருப்பழகி மற்றும் தொட்டியத்து சின்னான், பேச்சியம்மன், காளியம்மன், நாகர், காமன் (மன்மதன்), கழுவடியான் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். அருகில் பெரிய தீர்த்தக்குளமும், எதிரில் பரந்த அரசமரமும் உள்ளது. மூலவர்களான மகாமாரியம்மன், காளியம்மன் கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
திருமணத்தடை, புத்திரபாக்கியம், தீராத நோய், விவசாயம் செழிப்படைய பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பல்வேறு அபிஷேகங்கள் செய்வதுடன், புதிய தாணியங்களை காணிக்கையாக செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இந்த கோயிலுக்கும் வடக்கில் தியாகராஜர்கோயிலும், தெற்கில் பெருமாள் கோயில் பெருமை சேர்க்கிறது.
தல வரலாறு:
சோழர் காலத்தில் இப்பகுதியில் வணிகர்கள் தங்கி சுற்றுப் பகுதியில் பொருட்களை வாங்கி வெளிபகுதிக்கு சென்று வணிகம் செய்ததால் பெருங்குடி என ஊர் பெயர் வந்தது. அப்போது வணிகம் செய்த பொருட்களை கள்வர்களிடம் இருந்து பாதுகாக்க ஒரு கோயில் கட்டினர். அந்த கோயில் அம்மனை காவல் தேவதையாக கருதினர். அதன் பின் அப்பகுதியில் பொருட்கள் களவு போகாமல் இருந்ததால் குலத்தை காத்ததாக கருதி குலதெய்வ வழிபாடு நடத்தினர்.
மன்னர்காலத்தில் கலை நயமிக்க தூண்கள் அமைத்து ஒட்டு கட்டடம் கட்டி குலதெய்வ வழிபாடாக மகாமாரியம்மன், மற்றும் காளியம்மனை அக்கா, தங்கையாக கருதி இரு கோயில்கள் தனித்தனியாக அமைத்தனர். கோயில் காலப்போக்கில் பாதுகாப்பற்ற நிலையில் இடிந்து சேதம டைந் தது. அப்பகுதியினர்கள் வரி வசூல் செய்து கோயில் கட்டி கும்பா பிஷேகம் செய்து ள்ளனர். இங்கிருந்து குடி பெயர்ந்து சென்ற வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து விசேஷ தினங்களில் குல தெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர். மகாமாரியம்மன் மற்றும் காளியம்மன் என இரு கோயில்கள் கட்டி விக்கிரகங்கள் வைத்து வழிபாடு நடக்கிறது. 2013 ஜனவரி மாதம் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 500 ஆண்டுகள் மேற்பட்டக் கோயிலாகும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள விக்கிரகங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.