Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காசிவிஸ்வநாதர்
  உற்சவர்: நடராஜர் உடனுறை சிவகாமியம்மாள்
  அம்மன்/தாயார்: விசாலாட்சி
  தல விருட்சம்: பன்னீர் புஷ்பம், மாவிலங்கம், கஸ்தூரி, அரளி, மற்றும் வில்வம்
  தீர்த்தம்: பூசபுஷ்கரணி
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமப்படி பூஜை
  புராண பெயர்: முற்காலத்தில் மிகவும் தாழ்வான பகுதியாக இருந்து சுற்றுப்பகுதியில் தேங்கிய வெள்ளம் மற்றும் மழை நீர் வழிந்தோடிய நிலையில் அப்பகுதியில் விவசாயம் செய்ய சென்ற தொழிலாளிகள் கரைப்பகுதியில் வசித்ததால் பிற்காலத்தில் குழிக்கரை என மருவியுள்ளதாக கூறப்படுகிறது.
  ஊர்: குழிக்கரை
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் மேற்கு பக்கம் பார்த்துள்ளன என்பது சிறப்புக்குரியவையாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், குழிக்கரை மற்றும் அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர் - 613704  
   
போன்:
   
  +91 9952538193 
    
 பொது தகவல்:
     
  இத்திருக்கோயில் ராஜகோபுரத்தின் கிழக்குப்பக்கம் வழியில் அமைக்கப்பட்டுள்ளது. மணி மண்டபத்தில் அதிகார நந்தி தலையை சாய்த்த வண்ணம் படுத்துள்ளது. 20 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு பக்கம் பார்த்த வகையில் நடராஜரும் சிவகாமியம்மாளும் அருள்பாலிக்கின்றனர். மூலவர் காசி விஸ்வநாதர் உத்திராட்சை பந்தலின் கீழ் கிழக்கு பக்கமும், அன்னபூரணி என்கிற விசாலாட்சி அம்மன் தெற்குபக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் நந்தி பலி பீடமும், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் எதிரில் அனுமன் வாழைப்பழத்தை உரிக்கும் வகையில் சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது. விநாயகர், நால்வர் மற்றும் அர்த்நாரீஸ்வரர், சேக்கிழார், சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடனும்,  தொந்தி விநாயகர், குருபகவான், லிங்கோத்பவர், ராகுகால துர்க்கை, சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரியுடனும், கஜலட்சுமி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, ரின, ருண விபோச லிங்கம், கார்த்திகை தீப அண்ணாமலையார், கால பைரவர் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  தோல் நோய்க்கான பரிகார ஸ்தலம். சகல ஐஸ்வர்யங்களுக்கும், திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியத்திற்கு பிரார்த்தனை செய்யும் ஸ்தலமாதலால் பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோயிலில் நடைபெறும் அன்னாபிஷேகத்தில் பங்கேற்று அதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  சோழ மன்னர்கள் வம்சத்தினர்கள் கட்டிய 108 சிவலத்தலங்களில் இதுவும் ஒன்று. முத்துசாமி தீட்சிதரால் பாடல் பெற்ற ஸ்தலம் தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாடில் உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் மேற்கு பக்கம் பார்த்துள்ளன. தோல் நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலம். மகா மண்டபத்தில் பிரதோஷம் செய்யும் இடத்தில் மேல் தளத்தில் மனித பிறவி எத்தனை இருக்கும் என்பதை செடி, கொடி, புழு மற்றும் பூச்சி பிற பிறவிகள் பின்னே மனிதப்பிறவி அதில் சிறப்பாக இருந்தால் இறைவனுடன் கலப்பதை  விளக்கும் மூலிகை படம் கடந்த பல ஆண்டுகளாக அழியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.  
     
  தல வரலாறு:
     
  சோழவளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே ஆறு கி.மீ., தொலைவில் குழிக்கரை கிராமம் உள்ளது. இப்பகுதியில்  இரண்டாம் குலோத்துங்க சோழன்  திருப்ணி செய்து அருள்பொழித் தேவவளநாடு என்று இவ்வூருக்கு தன் விருது பெயரான எதிரிலி சோழன் என்பதை எதிரிலி சோழபுரம் என இந்த ஊருக்கு சூட்டி மகிழ்ந்துள்ளான். அதன் பின் கி.பி., 1246-ல் ஆட்சி செய்த மூன்றாம் இராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து தன் பெயரை சேர்த்து ஒட்டக்குடி இராஜேந்திர சோழபுரம் என பெயர் மாற்றம் செய்ததாக வரலாற்று செய்தி கூறுகிறது. இப்பகுதியில் இக்கோயிலும் இருப்பதால் சோழ வம்சத்தினர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதி சொக்கப்ப முதலியார் (செல்வந்தர்) மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தோல் நோயால் பாதிக்கப்பட்ட முத்துசாமி தீட்சிதர் கடை காலத்தில் இங்குள்ள திருக்குளத்தில் குளித்து பன்னீர் புஷ்பம் கொண்டு வழிபாடு நடத்தியதால் தோல் நோய் நீங்கி குணமடைந்ததால் இக்கோயில் குறித்து பாடல் பாடியுள்ளார். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் ஆறு சிவத் தலங்கள் இருப்பது இக்கோயிலுக்கும் சிறப்பு சேர்க்கிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் மேற்கு பக்கம் பார்த்துள்ளன என்பது சிறப்புக்குரியவையாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar