Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கவைய காளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கவைய காளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கவைய காளியம்மன்
  அம்மன்/தாயார்: கவைய காளியம்மன்
  தல விருட்சம்: புன்னை மரம்
  ஆகமம்/பூஜை : இரண்டு கால பூஜை
  ஊர்: துடியலூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாட்டுப் பொங்கல் அன்று விசேஷ பூஜை, ஆடி வெள்ளி, செவ்வாய் நவராத்திரி உற்சவம்.  
     
 தல சிறப்பு:
     
  மிகப் பழமைவாய்ந்த கோயில் என்பதால் இது தனிச்சிறப்பு பெறுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கவைய காளியம்மன் திருக்கோயில், வடமதுரை அஞ்சல், அப்பநாயக்கன்பாளையம், துடியலூர், கோயம்புத்தூர்-641017.  
   
போன்:
   
  +91 97916 00285, 98657 06086 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் கவையகாளியம்மனை மூலவராக அமைத்து, கணேச விநாயகர், விஷ்ணு நாதர், கன்னிமூலை விநாயகர், சப்த கன்னிகள், மற்றும் கருப்பநாயர் என பரிவார தேவதைகள் உள்ளடக்கிய மூன்று நிலை கோபுரத்துடன், கூடிய கருங்கல்லினால் கட்டப்பட்ட கருவறை, அர்த்த மண்டபம் என கட்டப்பட்டுள்ளன. முன் மகாமண்டபம் ஸ்தல விருட்சகத்திற்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடையே நன்கு மிக அழகாக அமைப்பட்டுள்ளது. பழமையான ஸ்தலவிருட்சம் 5 அடி வட்டத்தினைக் கொண்டபருமனாக அமைந்து நாளடைவில் சிதைந்து வருவதை நன்கு பாதுகாக்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் 1500 ச. அடி பரப்பளவில் கோவில் திருவிழாக்களை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  குடும்ப பிரச்சனை தீர, திருமண தடை நீங்க, வியாதி குணமடைய பிரார்த்தனை மேற்கொள்வர் 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பொ<ங்கலிட்டு, பூஜைகள் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  இப்பகுதி மக்கள் தங்கள் பாதுகாவலுக்கு இவளை மனமாறவேண்டுகின்றனர். இக்கோயில் சில குடும்பங்களுக்கு குல தெய்வமாக அமைந்ததால் அவர்களால் இதற்கான மனையினை கிரயம் பெற்று ஒரு பெரிய வளாகத்தை உருவாக்கி மிகவும் அற்புதமான கோயில் கருங்கல் கட்டிடத்தின் வேலைப்பாடுகளுடன் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இப்பகுதி மக்கள் அனைவரும் மிக பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வருகிறார்கள். சகல வழிபாடுகள், ஆகம விதிகள்படி நடைபெற்று வருகிறது.
 
     
  தல வரலாறு:
     
  கவயகாளியம்மன் 1996 -ம் வருடம் வரை ஸ்தல விருட்சத்தின் கீழ் அமர்ந்து அருள்பாலித்து வந்தாள். பல நூற்றாண்டுகளாயும், பல தலைமுறைகளாகவும் தங்கள் விவசாய பூமியில் அம்பாள் அமர்ந்து இவ்வூருக்கு காவல் தெய்வமாகவும், பல குடும்பங்களின் குல தெய்வமாகவும் இருந்துவந்தாள். இவளுக்கு 1996 -ம் ஆண்டு சிறிய மேடையில் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது. இது பேரூர் ஆதீனம் தவத்திரு ராமசாமி அடிகளாரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது. அம்மனுக்கு பெரியளவில் கோயில் அமைக்க வேண்டும் என்று பெறப்பட்ட உத்திரவின் பேரில் கல்கட்டிடத்தினால் கொண்ட 3 நில கோபுரத்துடன் பரிவார தேவதைகளுடன் கூடிய சன்னிதிகள் அமைத்து 1.5.2015 தேதியன்று இக்கோயிலின் குடமுழுக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மிகப் பழமைவாய்ந்த கோயில் என்பதால் இது தனிச்சிறப்பு பெறுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar