திங்கள், வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும்தான் பூஜைகள் நடைபெறுகின்றன. அமாவாசையன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் பால்பண்ணை தொழில் நடத்துபவர்கள் மற்றும் பால் விநியோகம் செய்பவர்கள் குழுவாக வந்திருந்து பொங்கலிட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்கின்றனர். மாட்டுப்பொங்கல் இத்தலத்தின் முக்கிய விழா அன்று சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.
திறக்கும் நேரம்:
வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறந்திருக்கும்.. சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை – காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.
முகவரி:
அருள்மிகு கோமாளி அரங்கன் திருக்கோயில்,
செங்காளிபாளையம்,
குப்பேபாளயம் கிராமம் அஞ்சல் .
எஸ். எஸ்.குளம் வழி
கோயம்புத்தூர் –641 107 .
போன்:
+91 90958 47824, 98653 76557.
பொது தகவல்:
கோயிலில் வேப்பமர மேடையைச் சுற்றி சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது. மேற்கூரை இல்லை. இவர் சன்னதியை அடுத்து புளி, வேம்பு, ஆல், பூவரசன் மற்றும் காரை மரங்கள் சூழ்ந்து அந்த இடம் பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கிறது. உச்சிவெயிலின் போதும் அந்த இடம் மிகக் குளிர்ச்சியாகவே இருப்பது சிறப்பு. விநாயகர் கருப்பராயன் மற்றும் கன்னிமார் ஆகியோருக்கும் தனிச்சன்னதிகள் இருக்கின்றன.
பிரார்த்தனை
கால்நடைகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்காகவும் இங்கு வேண்டுதல் செய்யப்படுகிறது. குழந்தைப்பேறின்மைக்காக குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகளுக்காக கோமாளி அரங்கனிடம் வேண்டிக்கொண்டாலும் பலன் கிடைக்கின்றது.
நேர்த்திக்கடன்:
கால்நடைகளை காப்பதற்கென பிரத்யேகமான ஒரு தெய்வம் இருக்கிறார் என்றால் கோவை மாநகருக்கு அருகில் செங்காளிபாளையம் என்னும் ஊரில் குடிகொண்டுள்ள கோமாளி அரங்கன்தான் அவர். இவ்வூரில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், கோமாளி நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார். பசுக்களின் மீது மிகுந்த அன்பும் பரிவும் கொண்டவர். புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே மாடுகளை மேய்ப்பார். அவரது புல்லாங்குழல் இசையில் மயங்கி, அவரைச் சுற்றியே மாடுகள் நின்று கொண்டிருக்கும். கிராமத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருபவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இவரிடம் அழைத்து வந்து பச்சிலை சிகிச்சை மேற்கொள்வர். இவரது கைராசியால் கால்நடைகள் பூரணகுணம் அடைந்துவிடும்.
நாளடைவில் இவரது புகழ் அருகில் உள்ள கிராமங்களில் பரவ, அதிக அளவில் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் இவரை நாடி வரத் தொடங்கினர். இந்நிலையில், ஒருநாள் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அவரை இடி தாக்க, அங்கேயே அவர் உயிர் பிரிந்தது. நீண்ட நேரமாகியும் நாயக்கர் திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்து தேடத்தொடங்கினர். இறுதியில் அவரது உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மாடுகள் கண்ணீர் சிந்தியபடி அவர் உடலைச் சுற்றி நின்றிருந்தன. பின்னர் அங்கேயே அவர் உடலை அடக்கம் செய்துவிட்டு, உறவினர்கள் வீடு திரும்பினர். சில நாட்கள் கழித்து அங்கிருந்த ஒரு வேப்பமரத்தடியில் சிறிய மேடை அமைத்து, அதில் கோமாளி நாயக்கர் நினைவாக நடுகல் வைத்து அப்பகுதி மக்கள் வழிபாடு செய்தனர். இந்த இடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டவர்களின் கால்நடைகள் நோய் நீங்கி குணமடைந்தன. கோமாளி நாயக்கர் புல்லாங்குழல் இசைத்து மாடுகளை மேய்த்து வந்தவர் என்பதால், அவரை விஷ்ணுவின் அவதாரமாகவே மக்கள் கருதினர். எனவே விஷ்ணுவின் சிலை ஒன்றும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவர் கோமாளி அரங்கன் என அழைக்கப்படுகிறார்.
தலபெருமை:
ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமாக கோமாளி அரங்கனுக்கு பாலாபிஷேகம் செய்து, வேண்டிக் கொண்டு சிறிது தீர்த்தத்தை கால்நடைகள் மீது தெளிக்கிறார்கள். அப்படிச் செய்வதால் அவை விரைவில் குணம் அடைகிறது. பசுவின் காம்பின் மடியில் வெடிப்பு ஏற்பட்டால் அங்குள்ள வேப்ப மரத்தின் பட்டையை பூஜையில் வைத்து பிரார்த்தித்து கொடுக்கின்றனர். அப்பட்டையை அரைத்து பசுவின் காம்பில் தடவினால் பால் நன்கு சுரக்க ஆரம்பித்து விடும். மேலும் கால்நடைகளுக்கு கருப்பு முடிகயிறு மந்திரித்து வழங்குகின்றனர். இதை கால்நடைகளின் கழுத்தில் கட்டிவிட்டால் திருஷ்டியும், நோய் நொடிகளும் அண்டாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
கால்நடைகளை காப்பதற்கென பிரத்யேகமான ஒரு தெய்வம் இருக்கிறார் என்றால் கோவை மாநகருக்கு அருகில் செங்காளிபாளையம் என்னும் ஊரில் குடிகொண்டுள்ள கோமாளி அரங்கன்தான் அவர். இவ்வூரில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், கோமாளி நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார். பசுக்களின் மீது மிகுந்த அன்பும் பரிவும் கொண்டவர். புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே மாடுகளை மேய்ப்பார். அவரது புல்லாங்குழல் இசையில் மயங்கி, அவரைச் சுற்றியே மாடுகள் நின்று கொண்டிருக்கும். கிராமத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருபவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இவரிடம் அழைத்து வந்து பச்சிலை சிகிச்சை மேற்கொள்வர். இவரது கைராசியால் கால்நடைகள் பூரணகுணம் அடைந்துவிடும்.
நாளடைவில் இவரது புகழ் அருகில் உள்ள கிராமங்களில் பரவ, அதிக அளவில் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் இவரை நாடி வரத் தொடங்கினர். இந்நிலையில், ஒருநாள் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அவரை இடி தாக்க, அங்கேயே அவர் உயிர் பிரிந்தது. நீண்ட நேரமாகியும் நாயக்கர் திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்து தேடத்தொடங்கினர். இறுதியில் அவரது உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மாடுகள் கண்ணீர் சிந்தியபடி அவர் உடலைச் சுற்றி நின்றிருந்தன. பின்னர் அங்கேயே அவர் உடலை அடக்கம் செய்துவிட்டு, உறவினர்கள் வீடு திரும்பினர். சில நாட்கள் கழித்து அங்கிருந்த ஒரு வேப்பமரத்தடியில் சிறிய மேடை அமைத்து, அதில் கோமாளி நாயக்கர் நினைவாக நடுகல் வைத்து அப்பகுதி மக்கள் வழிபாடு செய்தனர். இந்த இடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டவர்களின் கால்நடைகள் நோய் நீங்கி குணமடைந்தன. கோமாளி நாயக்கர் புல்லாங்குழல் இசைத்து மாடுகளை மேய்த்து வந்தவர் என்பதால், அவரை விஷ்ணுவின் அவதாரமாகவே மக்கள் கருதினர். எனவே விஷ்ணுவின் சிலை ஒன்றும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவர் கோமாளி அரங்கன் என அழைக்கப்படுகிறார்.
இருப்பிடம் : கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வீரபாண்டி பிரிவிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் காளிபாளையம் அருகே கோமாளி ரங்கன் திருக்கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. அதே போல் கோவை – சத்தியமங்கலம் மெயின் ரோட்டிலிருந்தும் வரலாம். கணேசபுரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து மேற்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் கோமாளி ரங்கன் திருக்கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது.