ஆண்டுதோறும் ஆவணிமாதம் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளியானது மூலவர் மீது விழும் நிகழ்வு சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்,
கோயம்புத்தூர்-641008.
போன்:
+91 99947 59195.
பொது தகவல்:
கிழக்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் கிழக்கு பார்த்து இந்திர விநாயகரும், இடதுபுறம் இந்திர ஈஸ்வரன் பெருமானாரும் வீற்றிருக்கின்றனர். உள்ளே கொடிமரமும், பலிபீடம் மற்றும் மயில் வாகனம் அமைந்துள்ளன. கருவறையை சுற்றி தக்க்ஷிணா மூர்த்தி, விஷ்ணு, பிரம்மா அமைக்கப்பட்டுள்ளது. மூலவராக பாலதண்டாயுதபாணி வீற்றிருக்கின்றார்.
பிரார்த்தனை
திருமணதடை நீங்குதல், செவ்வாய் தோஷம், கடன்தொல்லையிலிருந்து விடுபடவும், குழந்தை பாக்கியம் பெறவும், கிரகதோஷம் நீங்கவும், சகல சவுபாக்கியம் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய முருகபெருமானை பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நெய்தீபம் ஏற்றியும், சந்தனமாலையும், சர்க்கரை பொங்கலும் படைத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல் வழங்குதல் மற்றும் பால்பாயாசம் வழங்குகின்றனர். இதனை உட்கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்துகிறது. தோஷம் உள்ளவர்களுக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. முருகபெருமானை தரிசித்து விளக்கேற்றினால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம். இங்கே உள்ள தக்க்ஷிணாமூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர் இவரிடம் சுண்டல்மாலை அணிவித்து வழிபட்டால் வாழ்வில் வளம் பெறலாம். இங்கே உள்ள விஷ்ணுவை வழிபட்டால் நோய்கள் தீரும் என்றும், பிரம்மாவை வழிபட்டால் அறிவுபெற்று கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதும் நம்பிக்கை, இந்திர ஈஸ்வரன் வில்வமாலை மற்றும் பால் கொடுத்து பிரதோஷத்தில் வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் வெற்றி அடைவர். இக்கோயிலின் இடதுபுறத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மகாவிநாயகர் வீற்றிருகிறார் இவரை நெடுந்தூரம் பணம் செய்வோர், தொழில் துவங்குவோர், கல்வி மற்றும் திருமண தடை உள்ளோர் அருகம்புல் சாற்றி வழிபடுகின்றனர். இவரே குனியமுத்தூரின் ஆதிவிநாயகர்.
தல வரலாறு:
தேவேந்திர குலசமூகத்தாரால் 1933-ம் ஆண்டுக்கு முன்னர் இக்கோயில் சிறியதாக அமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் 1933ம் ஆண்டு பொதுமக்கள் ஆதரவோடு கோயில் பணிகள் முடிக்கப்பட்டு முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. அதற்குப் பிறகு சுமார் எழுபது ஆண்டுகள் கழித்து 2003-ம் ஆண்டில் பூரண மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து 2015-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் வருடாபிஷேகம் சிறப்புற நடைபெற்று வருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஆண்டுதோறும் ஆவணிமாதம் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளியானது மூலவர் மீது விழும் நிகழ்வு சிறப்பு.
இருப்பிடம் : கோயம்புத்தூர் உக்கடத்திலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் ஆத்துப்பாலத்திலிருந்து சுமார் 3 கி.மீ., துõரத்தில் உள்ள குனியமுத்தூரில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எதிரில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கோவை சென்ட்ரல் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம்