காலை: காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை: 5.00 முதல் 8.30 மணி வரை
முகவரி:
அருள்மிகு அருள் முருகன் கோயில், கடை வீதி, போத்தனூர், கோயம்புத்தூர் 641023
போன்:
+91 422 2410115, 94436 55981
பொது தகவல்:
பழனி முருகனை போன்று மேற்கு நோக்கி நின்ற வண்ணம் அமைந்துள்ளது,மூன்று நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது,மூலவர் கோபுரம் சிற்பம் இல்லாத கோபுரம்.
பிரார்த்தனை
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிப்பவர் .
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றயவுடன் அவர்கள் விருப்பப்படி அண்ணதானம் வழங்குதல்,காவடி எடுத்தல்,பால் குடம் உள்ளிட்வைகள்.
தலபெருமை:
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இக்கோவிலில் வந்த இளைப்பாரி விட்டு செல்வார்கள்.
தல வரலாறு:
இந்த கோவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கல்லினால் வைக்கப்பட்டு,வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர்,பக்தரின் கனவில் முருகன் வந்து இவ்விடத்தில் கோவில் கட்டி வழிப்பாடு செய்தால் அனைவருக்கும் அனைத்து அருளும் கிடைக்கும் என்று கூறி மறைந்தார்.பக்தர்களால் அபிேஷகம் அலஙகாரம் ஆராதனை அண்ணதானம் நடந்த வந்த சமயம் பக்தர்களால் ஜம்பொன் சிலை அமைக்கப்பட்டு,மிகவும் விமர்சையாக நடைபெற்று வந்தது,பிறகு முருக பக்தர்களால் அருள் முருகன் வழிபாட்டு சங்கம் அமைக்கப்பட்டு, அருள் முருகன் மூலவர் சிற்பம் அமைக்கப்பட்டு 1982 மகா கும்பாபிேஷகம் நடந்தது,மூன்று நிலை ராஜகோபுரம் நிறுவப்பட்டது.