கோட்டை கோயில் என்ற பேர் பெற்ற தலம். தற்போதும் இங்கு உடைந்த உயரமான மண் சுவர்கள் இங்கு உள்ளன. பல கல்வெட்டுகள் அழிந்த நிலையில் இங்கு காணப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
எந்த விதமான தோசங்களும் நிவர்த்தி பெரும் தலமாக இது அமைந்துள்ளது.
நேர்த்திக்கடன்:
செண்பகப் பூ மற்றும் மல்லிகை பூ இறைவனுக்கு சூடி வழிபாட்டில் நினைத்தது நடக்கும்.
தலபெருமை:
ராமானுஜர் துறவறம் பூண்டு தோசம் நீங்கி, நிவர்த்தி பெற்ற தலம். சுமார் 1000 ஆண்டு முற்பட்டது என்ற தகவல் உண்டு. ஆனால் கோவில் வரலாறு கல்வெட்டுகள் அழிந்துள்ளதால் சரியான ஆண்டு கணிக்க முடியவில்லை. இக்கோயிலுக்கு சொந்தமாக நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
தல வரலாறு:
சேர மன்னன் மீது, முகலாயமன்னன் போர் தொடுத்தபோது இந்த கோயிலை போர் வீரர்கள் பயன்படுத்தி உள்ளனர். கோயமுத்தூரின் மத்திய பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவிலும், புற நகர் பகுதியில் இக்கோயிலையும் அப்போதைய அரசர்கள் பயன்படுத்தி உள்ளனர். போரின் போது இக்கோவில் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில், இவற்றில் இன்றும் பல இடங்களில் பீரங்கி குண்டுகளால் ஏற்பட்ட துளைகள் காணலாம். மேலும் அப்தோதைய கேரள மாநிலத்தில் படகுகள் செலுத்த மாலுமிகள், இக்கோயிலில் தங்க வைக்கப்பட்டதால், இந்த ஊரை மாலுமிமச்சம்பட்டி என்று அழைத்து, அது மருவி இன்று மலுமாச்சம்பட்டி என்று அழைக்கபடுகிறது என்ற தகவல் உண்டு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ராமானுஜர் துறவறம் பூண்டு தோசம் நீங்கி, நிவர்த்தி பெற்ற தலம்.