Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாரியம்மன்
  தல விருட்சம்: எலுமிச்சை
  ஊர்: தென்னமநல்லூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி நாட்களில் விதவிதமான அலங்காரங்களில் அம்மன் அருள் புரிவார். ஆடி வெள்ளிக் கிழமைகளில் பெரும் அளவில் பெண்கள் பங்கு பெறும் நிகழ்வாக அமையும். இத் தலத்தின் தலையாய பெருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூச்சாட்டு விழாவாகும் சித்திரை மாதத்தில் வரும் இரண்டாம் செவ்வாய் அன்று பூச்சாட்டு, மூன்றாம் செவ்வாய் திருக்கம்பம் நாட்டுதல், பின்வரும் ஞாயிறு இரவு கிராம சாந்தி திங்கள் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அடுத்த நாள் நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரத்தடியில் அருள்பாலிக்கும் புராதனமான விநாயகர் கோயிலில் இருந்து அம்மனை அழைத்து வருவர். இவ்விநாயகர் மற்றும் அருகில் உள்ள முருகன் சன்னதிகள் பாண்டிய மன்னர் காலத்திலானவை என்பதற்கு சான்றாக, மீன் சின்னம் புடைப்புச் சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், ஆராதனைகள், முளைப்பாரி, மாவிளக்கு அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு என திருவிழா நிறைவு பெறும். இவ்விழாக்களில் சுற்றுவட்டார கிராமத்திலுள்ள மக்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு முளைப்பாரி மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி கண் கொள்ளக் காட்சிகளாகும். இவ்விழா ஊர் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, அமாவாசை பவுர்ணமி மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. மாத விழாக்களில் தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை முதல் நாள்) ஆடி வெள்ளி தைப்பூசம், நவராத்திரி, மார்கழி பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இத்தலத்தில் தைப்பூச விழா மிகவும் பிரதானமானதாகும். 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து காவடி சுமந்து கொண்டு பழநிக்கு பாதயாத்திரையாகச் செல்வர். இதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேத முருகனை அலங்கரித்து, இங்கிருந்து பழநிவரை இழுத்துச் சென்று கிரிவலப் பாதையில் வலம் வந்து நிறைவு செய்வர். தேரே மின் விளக்குக்கள் ஒளிர முருகன் பக்தி பாடல்கள் ஒலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட இத்தேரை டிஜிட்டல் தேர் என அழைக்கின்றனர். சுமார் 125 கி.மீ. பயணிப்பதால் அதற்கு ஏற்றாற்போல் தேர்ச் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  
     
 தல சிறப்பு:
     
  தமிழ் முறைப்படி தினமும் நண்பகல் 12 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் இருகால பூஜைகள் நடந்து வருகின்றன.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 10.30 முதல் 12.00 வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு மாரியம்மன் கோயில் தென்னமநல்லூர் 641 109 கோயம்புத்துார்.  
   
போன்:
   
  +91 99760 60060 
    
 பொது தகவல்:
     
  வடக்கு நோக்கியுள்ள நுழைவு வாயிலில் நுழைந்தால் மிகவும் விலாசமான 12 தூண்கள் தாங்கி நிற்கும் மகா மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்ட மைய விதானத்தில் பன்னிரு ராசிகளின் புடைப்பு சிற்பங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் அம்மனின் வாகனமான சிம்மம் அடர்ந்த பிடரியுடன் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது. அதன் பின்புறம் அம்மனின் ஆயுதமான சூலத்தைக் காணலாம். கருவறை வாயிலின் இருபுறமும் துவார சக்திகள் கம்பீரமாக காவல் புரிய, கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் புன்னகை ததும்பும் முகத்துடன் கருணை புரியும் நிலையில் கொலுவிருக்கின்றார். அம்மனின் அழகு திருமேனியை பார்த்த கண்கள் நகர மறுக்கின்றன. துவார சக்திகளின் இரு புறமும் விநாயகர் மற்றும் முருகனின் தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன. மகா மண்டபத்தின் கிழக்குப்புறம் மாகாளியம்மன் சன்னதியும் மேற்குப்புறம் சீதா ராமர், லட்சுமணன் சன்னதிகளும் உள்ளன. ராமர் சன்னதியில் ஆதி காலத்திலிருந்து பூஜிக்கப்பட்ட படம்தான் வைக்கப்பட்டுள்ளது. சிலைகள் ஏதுமில்லை. பெரியவர்கள் அந்தக் காலத்திலிருந்து பூஜித்து பஜனை செய்த படத்தை மாற்ற மனமில்லாமல் சிலைகளை நிறுவவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

கோஷ்டத்தில் பிரம்மஸ்ரீ வைஷ்ணவி, கவுமாரி ஆகியோர் வீற்றிருக்க வெளிச் சுற்றில் கருப்பராயர், கன்னிமார்கள், கன்னிமூல கணபதி ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்கின்றனர். ராமர் சன்னதியின் பின்புறம் துளசி மாடம் உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  கண் நோய் கண்டவர்களுக்கு அம்மனின் தீர்த்தத்தை எடுத்து அடுக்கு நந்தியா வட்டை மலரில் கண்ணில் ஒற்றிக் கொண்டால் விரைவில் குணமடைந்து விடுகிறதாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் காத்து ரட்சிக்கின்றார். திருமணத் தடை, குழந்தைப் பேறு இன்மை ஆகியவற்றுக்காக தன்னை நாடி வரும் பக்தர்களை அரவணைத்து பலன் அளிக்கின்றார். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு மகா அபிஷேகம் ஆராதனைகள் செய்து தங்கள் நன்றிக் கடனை நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  நொய்யல் நதி என்றழைக்கப்படும் காஞ்சி மாநதியின வடபுறம் இத்தலம் அமைந்துள்ளது. சுற்றிலும் தென்னந்தோப்புகள் மற்றும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் சூழ்ந்த பகுதியில் எழிலாக அமைந்துள்ளது.  
     
  தல வரலாறு:
     
  சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை நிகழ்த்திய கோயம்புத்தூர் புரட்சி 1800 ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் முறியடிக்கப்பட்டது. அதன்பின் கோவை மாவட்டத்தில் தங்கள் ஆளுகையினை ஸ்திரப்படுத்தினர். 1804ல் கோவை, புதியதாக நிறுவப்பட்ட மாவட்டத்தின் தலைநகராக மாறியது. சிறு கிரமமாக இருந்த கோவன் புதூர் சிறிது சிறிதாக வளர்ச்சி பெற்று 1848ல் நகராட்சியாக உயர்ந்தது.

காங்கேய நாட்டுப் பகுதியில் 1820 முதல் 1830 வரை கடுமையான வறட்சி ஏற்பட்டது. அதனால் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடின அப்பகுதியில் வசித்து வந்த கொங்கு வேளாளர்களும் கொங்கு குடிகளும் வாழ்வாதாரத்தை தேடி நீர்வளம் மிக்க மேற்கு பகுதியை நோக்கி பயணித்தனர். வெள்ளிங்கிரி மலைமுதல் பேரூர் வரை காஞ்சிமா நதிக்கரையோரம் நீர்வளம் மிக்க வனாந்திர பகுதியாக விளங்கியது. இப்பகுதியில் சுமார் 300 ஆண்டுகளாக தெலுங்கு பேசும் இனத்தவர்கள் சிறுகுடியிருப்புகளை அமைத்து, வேட்டையாடுதல் மாந்த்ரீகம், குறிசொல்லுதல் ஆகியவற்றை வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்தனர். தென்மைநாயக்கன் என்பவன் குடியிருப்பின் தலைவனாக இருந்தான். இப்பகுதி பிற்காலத்தில் தலைவன் பெயரால் தென்மை நல்லூர் என வழங்கப்பட்டது.

வாழ்வாதாரத்தைத் தேடிய மக்கள் இப்பகுதியில் குடியேறி தங்களுக்கே உரித்தான விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். நீர்வளம், வளமான பூமி, கடின உழைப்பு என மூன்றும் இணைந்து அதீத வளர்ச்சி கண்டனர். தன் உறவுகளும் புலம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறத்தொடங்கி, விவசாயத்தில் ஈடுபட்டு நல்ல ஏற்றம் கண்டனர்.

அந்த கால கட்டத்தில் 1876- 77ம் ஆண்டுகளில் மீண்டும் இந்திய அளவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. கொங்கு சீமையிலும் மழை பொய்த்தது. விளைச்சல் முற்றிலும் அழிந்தது. அப்போது ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களின் அலட்சியத்தாலும் நவீன போக்குவரத்து கட்டமைப்பு இல்லாததாலும் உண்ண உணவின்றி மக்கள் மடிந்தனர். இந்திய அளவில் கோடிக்கணக்கான மக்கள் பலியாயினர். இப்பஞ்சம் தென்மை நல்லூர் மக்களையும் விட்டு வைக்கவில்லை. ஏராளமான மக்கள் இப்பஞ்சத்தால் அழிந்தனர்.

இப்பஞ்சத்தில் பெரும் விலையாக உயிர்பலிகளை கொடுத்த தென்மை நல்லூர் மக்கள் கடின உழைப்பினால் ஒரே இடத்தில் வீடுகளையும் ஊரையும் தெருக்களையும் உருவாக்கினர் மழை பொய்த்து தங்கள் வாழ்வாதாரமே சீரழிந்து சின்னாபின்னமானதால் கிராமமே தாங்கொனா துன்பத்தில் இருந்தது. மாரி பொய்த்ததால் தாங்கள் அடைந்த துயரங்களைப் போக்க மழைக்குரிய தெய்வமான மாரியம்மனுக்கு ஒரு கோயில் அமைக்க ஒரு மனதாக முடிவு செய்தனர். அதன்படி 1890 மாரியம்மன், மகாளியம்மன் சன்னதிகளுடன் கூடிய கோயிலை உருவாக்கினர். 1939 -40 களில் மீண்டும் பஞ்சம். மக்கள் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை. கற்றாழை கிழங்கு உண்டு உயிர்வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்பகுதி வாழ்மக்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும் மீண்டு வர மாரியம்மன் அருள்புரிந்தார். சிறிது சிறிதாக மழை பொழிந்து ஊர் செழிப்படைந்து இவ்வூர் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது. காஞ்சி மாநதியில் நீர் பெருக விவசாயமும் செழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

தொன்மைவாய்ந்த இக்கோயில் முறையான பராமரிப்பு இன்றி சிதிலமடைந்தது. ஊர் மக்களின் பங்களிப்புடன் ஒட்டுகூரையுடன் விளங்கிய கோயில் கான்கிரீட் தளமாக அமைத்து, விமானத்திருப்பணியும் மேற்கொள்ளப்பட்டு, பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது துன்பத்தில் இருந்த போதும் மக்களை காத்த அம்மனும் இவரே... ஊர் கோயில்களில் முறையாக பூஜைகள் நடந்து விழாக்களும் நடைபெற்றால், அவ்வூர் செழித்து மக்கள் எந்தக் குறைவுமின்றி நல் வாழ்வு பெறுவர் என்பதற்கு இத்தலம் ஒரு சான்றாகத் திகழ்கின்றது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தமிழ் முறைப்படி தினமும் நண்பகல் 12 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் இருகால பூஜைகள் நடந்து வருகின்றன.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar