ஒவ்வொரு மாதம் அமாவாசை, பெளர்ணமி தினங்களில் விேஷச பூஜைகள் செய்யப்படுகின்றன. சித்திரை மாதம் தமிழ் வருட பிறப்பு விழா, வைகாசி மாத விழா, ஆனி மாத வருடாந்திர விழா, ஆடி மாதம் திருவிளக்கு பூஜை விழா, ஆவணி மாத ஞாயிறு விழா, புரட்டாசி மாதம் தாசர்களுக்கு அன்னதான விழா, ஐயப்பசி மாதம் அம்மாவாசை பெளர்ணமி விழா, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் விழா, மார்கழி மாதம் 30 நாட்களும் சிறப்பு பூஜை, தை மாதம் பொங்கல் விழா, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் அம்மாவாசை மற்றும் பெளர்ணமி விழா கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம்பு கோயில்.
திறக்கும் நேரம்:
காலை: 7 மணி முதல் 8 மணி வரை மாலை: 6 மணி முதல் 7.30 மணி வரை
முகவரி:
அருள்மிகு கானியப்பமசராயன் கோயில்,
சுகுணாபுரம் கிழக்கு,
குனியமுத்துார் அஞ்சல்,
கோயமுத்துார் - 641008
போன்:
+91 99438 64696
பொது தகவல்:
ஓங்கி உயர்ந்த இரண்டு வேப்ப மரத்தின் அடியில் கானியப்பமசராயன் உடன் செங்காளம்மாள் அருள்பாலிக்கிறார். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சுயம்பு சிற்பங்களும் அருகில் வரிசையில் உள்ளன. ஊஞ்சல் மற்றும் சக்திவேல் உள்ளது. மூலவர் எதிர் பக்கம் பிரம்மாண்டமான இரண்டு குதிரை வாகனங்கள் உள்ளன. நாகர் உடன் உண்டு.
பிரார்த்தனை
தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு, குதிரை போன்றவைகள் நலமுடன் வாழ இக்கோயிலில் பொம்மை வாங்கி வைத்து பிராத்தனை செய்வது பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. மேலும் கை, கால், உடல் நலன் பாதிக்கப்பட்டவர்களும் பொம்மை வாங்கி வைத்து பிராத்தனை செய்கின்றனர். உடன் யாதவ குல வராகு தினையான் (விறகு தலையான்) கூட்டத்தினர் திருமண தடை, தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம் போன்றவற்றிகும் பிராத்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
தங்கள் கோரிக்கை நிறைவேறிய உடன் கோயிலில் பொம்மை வாங்கி வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது. மேலும் அங்க வஸ்திரம் சாத்துதல், திருவிளக்கு பூஜைகளில் கலந்து கொள்ளுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏந்தி வருதல், கிடா வெட்டுதல் போன்றவையும் உண்டு.
தலபெருமை:
யாதவ குலத்தினரின் வராகு தினையான் (விறகு தலையான்) வம்சாவளியினரின் கோயில்.
தல வரலாறு:
பல நுாறு ஆண்டுகளுக்கு முன் குனியமுத்துாரை ஒட்டி இருந்த சுகுணாபுரம் பகுதியில் விவசாயம் செய்துவந்த யாதவ குலத்தினருக்கு விலங்கு மற்றும் பறவைகளிடமிருந்து தங்கள் பயிர்களை காக்க வேண்டி, தோட்டத்திலேயே தங்கும் நிலையும் வந்தது. பாடுபட்டு வளர்த்த பயிர்களை காட்டுப்பன்றிகளும், மயில்களும் அழித்த காரணத்தில், அங்கு குடில்கள் அமைத்து பகல், இரவு பாராமல் தங்கி வந்தனர். அப்படிப்பட்ட சூழலில் வனவிலங்குகளிலிருந்தும், துர் சக்திகளிடமிருந்து காக்கவும், அப்பகுதியில் இருந்த வேப்பமரத்தின் அடியில் சுயம்புவாக கருப்பராயனையும், முனியப்பனையும் வைத்து வழிபட்டனர். அதவாது கானி(நிலம்) காப்ப (காத்தல்) கருப்பராயன் மருவி கானியப்பமசராயனாக இப்பகுதியில் அருள்பாலிக்கிறார். இன்றும் இப்பகுதியில் உள்ள சில பெரியவர்கள், இரவில் கானியப்பன் கருப்பு குதிரையில் இப்பகுதியில் உலா வந்ததை தாங்கள் பார்த்துள்ளதாக கூறுவர். மேலும் செங்காளம்மாள் என்ற பெண் தெய்வம் தங்கள் யாதவ குலத்தில் பிறந்தவர் என்றும் அவர் தெய்வமாகி விட்டார் என்ற செவி வழி தகவலும் உண்டு. இன்று இப்பகுதியில் குடியிருப்புகளும், பள்ளிகள், கல்லுாரிகள் என வளர்ச்சி பெற்று இக்கோயில் மத்தியில் அமைந்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:யாதவ குலத்தினரின் வராகு தினையான் (விறகு தலையான்) வம்சாவளியினரின் கோயில்.
இருப்பிடம் : பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் குனியமுத்துார் அடுத்து சுகுணாபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து அரைக்கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள இக்கோயிலுக்கு ஆட்டோ மற்றும் மினி பஸ்களில் பயணிக்கலாம். மேலும் பொள்ளாச்சி ரோட்டிலிருந்து, மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக சுந்தராபுரம் அடுத்து காமராஜர் நகரிலிருந்தும் மினி பஸ், ஆட்டோவில் பயணிக்கலாம்.