விநாயகருக்கு காலை 8.30 மணியளவில் வளர்பிறை சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தியன்று மாலை 6.30 மணிக்கு கோயில் வளாகத்திலேயே பூஜை நடக்கிறது.
அத்துடன், முருகப்பெருமானுக்கு காலை 8.30 மணியளவில் வளர்பிறை சஷ்டி மற்றும் கிருத்திகை அன்றும், ராம பக்த ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு மாத மூலம் நட்சத்திரம் , வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், அகத்திய மகரிஷிக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையும், ஆயில்ய நட்சத்திர சர்ப்பசாந்தி பூஜையும், ஐஸ்வர்யலிங்கேஸ்வரர் மற்றும் நந்திக்கு பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 6.30 மணியளவில் சுக்ரஹோரையில் கோமாதா முன்பாக பக்தர்களே பூஜை செய்யும் தனிச்சிறப்பான வகையில் பசு கன்றுக்கு சிறப்பு பூஜையும், காலை 10.30மணி முதல்12.00மணி வரை துர்க்கை அம்மனுக்கு ராகு கால சிறப்பு அபிஷேக பூஜையும் மற்றும் அமாவாசை, பௌர்ணமி தின பூஜை அனைத்து கடவுள்களுக்கும் நடைபெறுகிறது.
தல சிறப்பு:
இந்த விருட்ச விநாயகர் முன்பாக அவரது பார்வையில் நவகிரகங்கள் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். அத்துடன் மஹாமேரு உடன் 8 வடிவ ராசி செடிகள் நடை வலம் போன்ற சிறப்புகளுடன் அமைந்துள்ள கோவில் இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை.
திறக்கும் நேரம்:
காலை 7 முதல் 12 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
பாரின் விநாயகர் கோவில்,
எல். ராமசாமி நகர் கே ஜி கார்டன், தியாகி என். ஜி. ராமசாமி நினைவு மேல் நிலைப் பள்ளி பின்புறம், காமராஜர் ரோடு, உப்பிலிப்பாளையம், கோயம்புத்தூர் 641015.
போன்:
+91 9442582787, 9944420151, 9629102014
பொது தகவல்:
கிழக்கு பார்த்த வர சித்தி ஃபாரின் விநாயகர், தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் முருகன், வடக்கில் துர்க்கை அம்மன் என சக்திவாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. இந்த ஃபாரின் விநாயகர் கோவிலில் வடக்கில் சுமார் 40 அடி உயரத்திற்கும் மேலான அரச மரத்தின் கீழ் கிழக்கு நோக்கிய விருட்ச விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த நவகிரகங்களுக்கு வடக்கே கிழக்கு பார்த்த ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் அதில் லட்சுமணர், ராமர், சீதா ஆகியோருக்கு சிறப்பான அபிஷேகம், பூஜை அலங்காரம் என கோவை மக்களிடயே பிரபலமடைந்து வரும் கோவில் ஆக உள்ளது. 8 வடிவ ராசி செடிகள் நடை வல ஆன்மீக தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 12 ராசி செடிகளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் 16 முறை சுற்றி நடந்து நோய் எதிர்ப்பு சக்தி - மற்றும் மன அமைதி பெற்று நல்ல ஆரோக்கியம் பெறும் விதமாக சிறு பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
அரசமரம், வேப்ப மரம், வில்வ மரம் என ஒரே நேர் கோட்டில் அமைந்து இறை சக்தியை அதிகப்படுத்தி கொண்டே உள்ளது தனிச்சிறப்பாகவுள்ளது. இக்கோவில் நவக்கி ரகங்களுக்கும் 8 வடிவ ராசிசெடிகள் நடைவல தோட்டத்திற்கும் இடையில் கிழக்கு பார்த்து அகத்திய மகரிஷி சிலை ஐந்தே கால் அடி உயரத்தில் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தில் அவரது கமண்டலத்தில் இருந்து நீர் கொட்டும் அமைப்புடன் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு தினசரி மாலை 6.30 மணியளவில் பூஜை நடைபெற்று வருகிறது. அகத்திய மகரிஷியின் நேர் பார்வையில் கன்றுடன் கோமாதா மற்றும் நந்தி, ஐஸ்வர்யலிங்கேஸ்வரர் இதற்கு மேல் காமதேனு இதன் அருகில் மகாமேரு என சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அகத்திய மகரிஷி நேர் பார்வையில் காய்த்து குலுங்கும் வில்வ மரத்தின் கீழ் இச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தியானம் செய்ய மிகவும் ஏற்ற வகையில் சிலைகள் தத்ரூபமாக அழகிய வண்ணங்களுடன் சாஸ்திரப்படி இறை சக்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும். இங்குள்ள நவகிரகங்கள் அதன் நான்கு புறங்களிலும் விநாயகர், ஆஞ்சநேயர், அகத்திய மகரிஷி என இறை சக்திகள் சூழந்துள்ள நிலையில் உள்ளதால் இந்த நவக்கிரகங்களை சுற்றி வரும் பக்தர்களின் பிரச்சனைகள் உடனுக்கு உடனே தீர்வதாக நம்பப்படுகிறது.
பிரார்த்தனை
சிறந்த கல்வி, வெளிநாடுகளில் வேலை கிடைக்க, திருமண தடை நீங்க, தொழில் வளர்ச்சி பெருக | குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
பாரின் விநாயகர் அகத்திய மகரிஷி, ராம பக்த ஆஞ்சநேயர் ராமர், சீதா, லட்சுமணர், கோமாதா, காமதேனு, நந்தி, ஐஸ்வர்யலிங்கேஸ்வரர்;, மஹாமேரு உடன் 8 வடிவ ராசி செடிகள் நடை வலம் போன்ற சிறப்புகளுடன் அமைந்துள்ள கோவில் இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை.
தல வரலாறு:
20 ஆண்டுகளுக்கு முன்அமைக்கப்பட்ட வர சித்தி விநாயகர் கோவில் அருகில் வசிக்கும் குடியிருப்பு உரிமையாளர்களின் குழந்தைகள் இன்று நல்ல கல்வி கற்று 25 நபர்கள் வெளிநாடுகளில் நல்ல வேலை கிடைக்கப்பெற்று வெளிநாடுகளில் வசிப்பதால் இந்த வர சித்தி விநாயகரை இப்பகுதி மக்கள் வர சித்தி ஃபாரின் விநாயகர் என்றே அழைத்து, கோவையில் ஒரு ஃபாரின் விநாயகர் என பெரும் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்த விருட்ச விநாயகர் முன்பாக அவரது பார்வையில் நவகிரகங்கள் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.
இருப்பிடம் : கோயம்புத்தூர் ஹோப்ஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிங்காநல்லூர் பஸ் நிறுத்தம் செல்லும் காமராஜர் ரோட்டில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது.