Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தீர்த்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு தீர்த்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தீர்த்தீஸ்வரர்
  உற்சவர்: தீர்த்தீஸ்வரர்
  அம்மன்/தாயார்: திரிபுர சுந்தரி
  தல விருட்சம்: மகிழம் மரம்
  ஊர்: திருவள்ளூர்
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை, மகா சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்களுக்கு தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6:00 – 11:30 மணி, மாலை 4:30 – 8:30 மணி 
   
முகவரி:
   
  அருள்மிகு தீர்த்தீஸ்வரர் கோயில், திருவள்ளூர்  
   
போன்:
   
  +91 70933 21811, 95008 43667 
    
 பொது தகவல்:
     
  மூன்று நிலை ராஜகோபுரத்தை கடந்து கோயிலுக்குள் கால் வைத்தவுடன், பறவைகள் எழுப்பும் இனிமையான ஓசை நம்மை வரவேற்கும். பிறகு தீர்த்தீஸ்வரர் தரிசனம். அவரது சன்னதியில் நிற்கும்போது நிம்மதியை உணர முடியும். பின் சன்னதியை வலம் வந்தால் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியரை தரிசிக்கும் பேறு கிடைக்கும். அதோடு திரிபுர சுந்தரி அம்பாளையும் சேவிக்கலாம். இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே சுப்பிரமண்யர் சன்னதி உள்ளது. இந்த அமைப்பை ‘சோமாஸ்கந்தர்’ என்கிறோம். இப்படி மூவரையும் தரிசிப்பது விசேஷம்தானே!
 
     
 
பிரார்த்தனை
    
  பவுர்ணமி, மகம் நட்சத்திர நாளில் கோயிலின் அருகில் குளத்தில் நீராடி, தீர்த்தீஸ்வரரை தரிசனம் செய்தால் சகல தோஷம் தீரும். 
    
 தலபெருமை:
     
 
ஒரு சமயம் காஞ்சி மஹாபெரியவர் இங்கு ஒரு மண்டலம் தங்கி, சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அந்த மகான் சொன்னதாவது: மகிழம் மரம், மால் வினை தீர்த்தரை வலம் வந்து வணங்கினால், மரத்தில் இருந்து மகிழம் பூ உதிர்வதுபோல் பக்தர்களது வாழ்விலும் துன்பங்கள் உதிரும்.

பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்களுக்கு தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்கிறது. மகிழம் மரம் தல விருட்சமாக உள்ளது. வரசித்தி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், தர்ம சாஸ்தா, பால தண்டாயுதபாணி, நவக்கிரகம், நடராஜர், கால பைரவர் சன்னதிகளும் உண்டு. ஒருமுறை சென்று வாருங்கள். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
 
     
  தல வரலாறு:
     
  மூர்த்தி, தீர்த்தம், தலம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலம் புராணத்தில் தீர்த்தபுரி என்று அழைக்கப்பட்டது. மது, கைடபர் என்ற அரக்கர்கள் ரிஷிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இவர்களை அழிக்க திருமாலிடம் முறையிட்டனர் ரிஷிகள். அவரும் சக்ராயுதத்தை ஏவி அரக்கர்களை வதம் செய்தார். வேதத்தில் சிறந்த அவர்களை அழித்ததால், திருமாலுக்கு தோஷம் ஏற்பட்டது. எனவே இங்கு வந்து தீர்த்தீஸ்வரரை வேண்டி தோஷம் நீங்கப்பெற்றார் திருமால். இதனால் மூலவர் ‘மால்வினை தீர்த்தர்’ என்று அழைக்கப்படுகிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்களுக்கு தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar