Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுருளிவேலப்பர் (சுருளி ஆண்டவர்)
  உற்சவர்: வேலப்பர்
  தீர்த்தம்: சுரபிதீர்த்தம்
  புராண பெயர்: சுருதிமலை
  ஊர்: சுருளிமலை
  மாவட்டம்: தேனி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரைத்திருவிழா, ஆடி பதினெட்டாம் பெருக்கு, ஆடி, தை அமாவாசை, தைப்பூசம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, பங்குனி உத்திரம்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் முருகன் குகைக்கோயிலில் அருள்பாலிக்கிறார். விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை 625 516 கம்பம். தேனி மாவட்டம்.  
   
போன்:
   
  +91-73733 62838, 97903 55234 
    
 பொது தகவல்:
     
  வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சி தருவது சிறப்பு. முருகன் குடிகொண்டதால் "நெடுவேள்குன்றம்" என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பது ஐதீகமாதலால் அனைவருக்கும் தனிசிலைகள் உள்ளன.

அமாவாசை தலம்: ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் அருவியில் தீர்த்தமாடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். ஆடி அமாவாசையன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு, சுருளி வேலப்பரே மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச்சடங்குகள் செய்து வைத்தார். எனவே, ஆண் வாரிசு இல்லாதவர்களும், இறுதிக்காலத்தில் ஆறுதல் தேடுபவர்களும் இவரை தங்கள் மகனாக ஏற்று வழிபடுகிறார்கள். இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருப்பது சிறப்பு. இதனால் இங்கு விபூதி, குங்குமமும் தருகிறார்கள், சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக்கால பூஜையின்போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு தெட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர், இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.


 
     
 
பிரார்த்தனை
    
  சுவாமிக்கு விசேஷ அபிசேகங்கள், பால்குடம் எடுத்து முடிக்காணிக்கை செலுத்தி, சுரபி நதியில் நீராடி வணங்க பாவம் நீங்கும், நல்வாழ்வு, வேண்டும் வரம் கிடைக்கும், தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. அன்னதானம் செய்வது பிரதானம். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னதானம் செய்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
 

சிவனின் திருமணத்தின் போது, அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால்தான் இக்குகை கைலாசகுகை எனப்படுகிறது.


குகைச்சிறப்பு: இங்கு விபூதிக்குகை, சர்ப்பகுகை, பாட்டையா குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.


ஓம்கார' வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது. இதில் தவம் செய்திட பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.


குன்றுதோறாடல் கோயில்: திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர், மலைக்கோயில்களை "குன்றுதோறாடல்' என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. சுருளி வேலப்பர், மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர், மகாலிங்கம், சந்தான கிருஷ்ணர், வீரபாகு, ராமபிரான், லட்சுமணன் உள்ளனர். இம்மலைப்பகுதியில் சித்தர்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.


குகைக்குள் சிவதரிசனம்: இங்குள்ள ஒரு குகையில் கைலாசநாதர் (லிங்கம்) சன்னதியும், குகையின் மேலேயுள்ள குன்றில் முருகன் சன்னதியும் உள்ளன. இந்த குகையை "கைலாச புடவு' (கைலாச குகை) என்கிறார்கள். குகைக்குள் ஒவ்வொருவராக ஊர்ந்து சென்று வழிபட முடியும். குகையின் உள்பகுதியில் இருவர் மட்டும் அமர்ந்து பூஜை செய்யலாம். குகைக்குள் இருந்து தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. குகைக்குள் சென்று வருவதே யோகாசன பயிற்சி செய்வது போலாகும். கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. தீர்த்தம் பட்டு இந்த பாறையின் துகள்கள் வெண்ணிறத்தில் இருக்கிறது. இந்த துகளையே பிரசாதமாக தருகிறார்கள்.


 
     
  தல வரலாறு:
     
 

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமண சீராக நம்பிராஜன், தனது ஆட்சிக்குட்பட்ட மலைப்பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இதுவும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒருசமயம் சனி பகவான், தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால், "சுருதி' எனப்பட்ட தீர்த்தம், "சுருளி' என மருவியது. முருகனுக்கும் "சுருளி வேலப்பர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக்கோலத்தில் இருப்பதால் இவர், "சுருளியாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார்.


ராவணேஸ்வரன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக்காக்க மகாவிஷ்ணு பூதசொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவணேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள், ரிஷிகள்,சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar