மாதம் தோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடக்கிறது. தைப்பூசத்தன்று விசேஷ பூஜை, பங்குனி உத்திர திருநாளில் தேரோட்டம் ஆகியவை நடக்கிறது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காவடி ஆட்டம், அன்னதானம் நடக்கிறது.
தல சிறப்பு:
கோயிலின் அருகே உள்ள புற்றில் ஒரு விசேஷம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த புற்றில் இருந்து ஒரு ஒளிக்கீற்று கிளம்புவதைக் காண்பதாக பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை நடைதிறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில்
முத்துக்கவுண்டனூர் - 642109,
கிணத்துக்கடவு,கோயம்புத்தூர்.
போன்:
+91 - 422 - 234 0462, + 91- 4253 292 860.
பொது தகவல்:
தைப்பூசத்திருநாளில் வேலுடன் நிற்கும் இந்த முருகனை தரிசித்தால் நமது வினைகள் எல்லாம் அகலும்.
வள்ளி-தெய்வானையுடன் உற்சவராகவும் அருள்கிறார் முருகப்பெருமான். மேலும், வெள்ளியங்கிரி ஆண்டவர், மாணிக்க விநாயகர், நாகர் சன்னதிகளும் இங்கு உண்டு. நாகதோஷம் உள்ளவர்களுக்கு நாகர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் பக்தர்கள் முருகனை வழிபட்டு பலனடைகிறார்கள். நினைத்த காரியங்கள் நடக்கிறது என்றும், மனதிற்கு நிம்மதியும் தெம்பும் கிடைக்கிறது என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
தலபெருமை:
அறுபடை வீடுகளில் ஐந்தில் குன்றில் இருக்கும் முருகப் பெருமான் இன்னும் பல மலைகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். கேரள எல்லையில், கோயம்புத்தூர் அருகே உள்ள முத்துக்கவுண்டனூர் முத்துமலையிலும் முருகன் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு:
முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக கீழே இறங்கியவர் இம்மலையில் கால் பதித்ததால் இது சூமுத்துமலை' என்றாகி விட்டது. ஒருமுறை இந்த ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி,"இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில் தான் சிலை வடிவில் இருக்கிறேன்," என்றார்.
இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு, இதேபோல் தொடர்ந்து 3 கார்த்திகை தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும் அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூற, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக்கண்டு பரவசமடைந்தார். இதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டடு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோயிலின் அருகே உள்ள புற்றில் ஒரு விசேஷம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த புற்றில் இருந்து ஒரு ஒளிக்கீற்று கிளம்புவதைக் காண்பதாக பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.
இருப்பிடம் : கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு உள்ளது. அங்கிருந்து மேற்கே 12 கி.மீ. தூரத்தில் உள்ள முத்துக்கவுண்டனூரில் கோயில் அமைந்துள்ளது. கிணத்துக்கடவிலிருந்து பஸ் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கிணத்துக்கடவு,
கோயம்புத்தூர்.