ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணரின் ஜன்ம நட்சத்திரமான ரோகிணி நன்னாளில் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.
தல சிறப்பு:
மார்கழி மாதத்தில் தினமும் பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வரும் காட்சி சிலிர்க்க வைக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சந்தான வேணுகோபால கிருஷ்ணர் திருக்கோயில்
காரமடை, கோயம்புத்தூர்.
பொது தகவல்:
இங்கே உள்ள மண்டபங்களும், அவற்றில் உள்ள தூண்களும், தூண்களில் உள்ள சிற்பங்களும் கொள்ளை அழகு!
பிரார்த்தனை
நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சணம் செய்து துளசி மாலை அணிவித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
சனிக்கிழமைகளில், வேணுகோபால சுவாமி பஜனைக் குழுவைச் சேர்ந்த அன்பர்கள், கிருஷ்ண பரமாத்மாவைப் போற்றும் விதமாகப் பஜனைப் பாடல்களைப் பாடுவது இங்கு வழக்கம். இதனால் சந்தான வேணுகோபால கிருஷ்ணரைத் தரிசிப்பதற்காகவும் பஜனையில் பங்கு பெறுவதற்காகவும் காரமடை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அன்றைய நாளில் வந்து செல்கின்றனர். மார்கழி மாதத்தில் தினமும் பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வரும் காட்சி சிலிர்க்க வைக்கும். அப்போது நான்கு ரத வீதிகளிலும் தண்ணீர் தெளித்துச் சுத்தப்படுத்தி, மிகப் பெரிய கோலங்கள் இட்டு, விளக்கேற்றி கிருஷ்ண பஜனைப் பாடல்கள் பாடி, வருவோரை வரவேற்பார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், மூலவர் மற்றும் உத்ஸவருக்குத் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் விசேஷ அலங்காரங்கள் நடைபெறும். அன்றைய தினம் வெண்ணெய், கற்கண்டு, சீடை, சுக்கு வெல்லம், முறுக்கு மற்றும் நவ்வாப்பழம் (நாவல் பழம்) என பட்சணங்களும் பழங்களும் கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இந்த நாளில் கிருஷ்ணரைத் தரிசித்தால், வாழ்வில் வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். மறுநாள் உத்ஸவர் சர்வ அலங்காரங்களுடன் திருவீதியுலா வருவதைக் காணக் கண் கோடி வேண்டும். இரவில் உறியடி உத்ஸவ விழா நடைபெறும்.
தல வரலாறு:
முழுவதும் கருங்கல்லால் அமைக்கப்பட்ட அற்புதமான கோயிலில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் இது பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்றும், திருமலை நாயக்கர் காலத்துக்கு முந்தைய ஆலயம் என்றும் வரலாறு தெரிவிக்கிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மார்கழி மாதத்தில் தினமும் பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வரும் காட்சி சிலிர்க்க வைக்கும்.
இருப்பிடம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு அருகில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது காரமடை. இங்கே பிரசித்திபெற்ற ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது சந்தான வேணுகோபால கிருஷ்ணர் கோயில்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
காரமடை, மேட்டுப்பாளையம்