சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இங்கே செல்லுவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயில்
ஆவாரம்பாளையம், கோயம்புத்தூர்.
பொது தகவல்:
இக்கோயிலில் உள்ளே நுழையும் முன் திரிசூலம் அடுத்து கொடிமரமும், பிரகாரத்தில் மகா மண்டபம் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
மனத்தில் எப்போதும் கவலை, தொழிலில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பிரச்னை, குடும்பத்தில் பூசல், தோல் வியாதி என வாழ்வில் பல சிக்கல்கள் தீர இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும் மிளகு உப்புக் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு, ஏதேனம் காரணங்களால் அங்கே செல்ல இயலாதவர்கள், தங்களது நேர்த்திக்கடனை இங்கு வந்து செலுத்திச் செல்வதாகத் தெரிவிக்கிறார்கள். பண்ணாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா பிரசித்தம்! அதேபோல், இங்கேயும் அதே நாளில் விமரிசையாக நடைபெறுகிறது திருவிழா. அந்த நாளில் இங்கு வந்து அம்மனுக்கு மிளகு மற்றும் உப்புக் காணிக்கை செலுத்தி பிரார்த்தித்துக் கொண்டால், எத்தகைய தோல் வியாதியும் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
பண்ணாரி அம்மனின் பக்தர்கள் அடிக்கடி பண்ணாரி சென்று அம்மனை தரிசிக்க இயலவில்லை என்ற மனக்குறையுடன் இருந்தனர். தங்களது மனக்குறையை நீக்க தாங்களே இந்த பண்ணாரி அம்மன் கோயிலை அமைத்து பூஜை செய்ய துவங்கினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இங்கே செல்லுவது சிறப்பு.
இருப்பிடம் : கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்தும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது ஆவாரம்பாளையம். கோயிலுக்குச் செல்ல அடிக்கடி பஸ் வசதி உண்டு.