இத்திருக்கோயில் அப்பர் பெருமானால் பாடப்பட்ட வைப்புத்தலம். பங்குனி 7ம் தேதியில் இருந்து 11ம்தேதி வரை ஐந்து நாட்கள் மாலை 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளிபடுது சிறப்பு. இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்
இராப்படிஸ்வரம் வீதி.,
மணக்கால் ஐயம்பேட்டை மற்றும் அஞ்சல்
திருவாரூர் -610104.
போன்:
+91 8526904046
பொது தகவல்:
கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரராக ஆண்பாதி பெண்பாதியாக ஒரு கையில் வளையல், காலில் சிலம்பு, விரளில் மெட்டி, ஒரு பக்கம் ஆபரணங்களுடன் ரித்த வண்ணம் அருள்பாலிக்கிறார். சகாதிமுனிவர்கள் அருகில் உள்ளனர்) அவரை பார்த்த வண்ணம் நந்தி படுத்துள்ளது., சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கியும்ம் மேற்கு நோக்கியும் விநாயகர் அருள்பாலிப்பது சிறப்பு. பிரகாரத்தில் மகாமண்டபமும் எதிரில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் நுழைவுவாயிலில் சரஸ்வதியும், லட்சுமியும் அருள்பாலிப்பது சிறப்பாக உள்ளது.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், சிறப்பு ஹோமங்கள் நடத்தியும், அன்னாபிஷேகம் செய்தும், நோய் பிடியில் இருந்து விடுபட்டவர்கள் நவக்கிரக ஹோமம் நடத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் (நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும் அப்பர் பாடிய அபிமுக்தீஸ்வரர் கோயிலும் உள்ளது) சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என மறுவியது. மிகவும்பழமை வாய்ந்த திருக்கோயில் சோழர் காலத்துக் கோயில்களில் இதுவும் ஒன்று. மேற்கு பக்கம் வழி உள்ளது. பலிபீடம் மற்றும் நந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது. மூலவர் (சுயம்பாக) மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு:
சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவலாங்கள் 108 இல் இதுவும் குறிப்பிடதக்கது. இக்கோயிலை காரைக்குடியைச்சேர்ந்த செட்டியார் ஒருவர் பராரித்தார். தற்போது திருவாரூர் ஆன்மிக ஆனந்தம் அமைப்பைச்சேர்ந்த கனகராஜ் என்பவர் பாராமரித்து வருகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்திருக்கோயில் அப்பர் பெருமானால் பாடப்பட்ட வைப்புத்தலம். பங்குனி 7ம் தேதியில் இருந்து 11ம்தேதி வரை ஐந்து நாட்கள் மாலை 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளிபடுது சிறப்பு. இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் : திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து 12 கி.மீ.,தொலைவில் கோயில் உள்ளது. திருவாரூர்- கும்பகோணம் சாலையில் 11 கி.மீ., தொலைவில் மணக்கால் ஐயம்பேட்டை உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கே 1 கி.மீ.,தொலைவில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கொரடாச்சேரி, திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020.