Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாசானி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மாசானி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாசானி அம்மன்
  உற்சவர்: மாசானி அம்மன்
  அம்மன்/தாயார்: மாசானி அம்மன்
  ஊர்: எரிச்சநத்தம்
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை மாதத்தில் அம்மன் தேரில் உலாவரும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  அம்மன் ஐம்பொன் திருஉருவம்: மாசானி அம்மன் கோட்டை உருவாவதற்கு முன் முதன் முதலாக ஐம்பொன்னில் சிலையாக உருவாக்கப்பட்டு கருவறையின் மேற்குபுறம் கீழ்தளத்தில் வடக்கு நோக்கி ஐந்து தலை நாகனுள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். விழாக்காலங்களில் தேரில் உலா வருவதும் சித்திரை மாதம் நடைபெறும் சிறப்பு பூஜையில் அம்மன் குளக்கரைக்குச் சென்று நீராடி 16 அபிஷேகம் செய்து எடுத்து யாகத்தில் வீற்றிருந்து அருள்புரிவதும் இந்த அம்மனின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மாசானி அம்மன் திருக்கோயில், எரிச்சநத்தம் 626 103 வத்றாயிருப்பு வழி, விருதுநகர்.  
   
போன்:
   
  +91 8870208911, 98421 71669 
    
 பொது தகவல்:
     
  அமுத விநாயகர்: கோட்டையின் முன் வாசலில் ஈசான மூலையில் கிழக்கு முகம் பார்த்து வீற்றிருக்கும் அமுத விநாயகர்.

முறை கருப்பசாமி:
கோட்டையின் முன்பு தென்மேற்கு திசையில் கிழக்கு முகம் பார்க்க காவலாக வீற்றிருக்கும் முறைகருப்பசாமிகள் வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மாசான கருப்பு: கோட்டையில் முன்மண்டபத்தை கடந்து இருபுறமாக உள்ள பீடத்தில் மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார் மாசான கருப்பு. மாசானி அம்மன் அபிஷேக திருஉருவம்: அம்மனது உருவமானது ஒரே கல்லில் வடிக்கப்பட்டு வடக்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

சப்த கன்னிமார்:
கோட்டையின் மேற்கு புறத்தில் பிரம்ஸ்ரீ, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி கிழக்கு நோக்கி பீடம் அமைக்கப்பட்டு வரும் மக்கள் அனைவருக்கும் அருள்புரிந்து வருகிறார்கள்.
மகாமுனீஸ்வரர்: அம்மனது பிரதான பீடத்திற்கு முன் அம்மன் பார்வைக்கு நேராக தெற்கு நோக்கி மகாமுனீஸ்வரர்.
முன்னடி கருப்பசாமி: அம்மனின் பிரதான பீடத்திற்கு முன்னால் தெற்கு நோக்கி முன்னடி கருப்பசாமி. மதுப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இவருக்கு இளநீர் வைத்து வழிபட்டு முறையிட்டு சென்றால் விரைவில் தீர்த்து வருகிறார் முன்னடியார். மதுப்பழக்கத்தில் மற்றும் மனக்குழப்பத்தில் உள்ளவர்களுக்கு குழப்பங்களை நீக்கி அருள்பாலித்து வருகிறார்.

108 கருப்பசாமிகள்: அனைவரின் குலத்தெய்வத்திற்கும் காவலாக வீற்றிருக்கும் கருப்பசாமிகள் அனைத்தும் அம்மனுக்கு காவலாக அமையப்பெற்று அம்மனின் அருள்வாக்கின்படி அடிக்கு ஒரு கருப்பாக நொடிக்கொருத்தன் காவல் என்று 108 கருப்பசாமிகள் புடைசூழ மாசானி அம்மன் பிரதான கருவறையில் அருள்புரிந்து வருகிறார். குலதெய்வ கோயிலில் குறைகள் குழப்பங்கள் இருந்தால் இங்கு வந்து முறையிடும்போது கருப்பசாமிகளும் மாசானி அம்மனும் தீர்த்து வைப்பார்கள் என்பது கருப்பசாமிகள் அருள்வாக்கு. குலதெய்வமே தெரியாதவர்களுக்கு இங்கு விடை கிடைக்கும். நிறைய மக்களுக்கு குல தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளும் அருள்வாக்கில் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இக்கட்டான சூழ்நிலைகளில் 108 கருப்பசாமிகளை மனதில் நினைத்து அழைத்தால் ஆபத்து போன்றவற்றில் இருந்து காத்து கொடுப்பேன் என்பதும் 108 கருப்பசாமிகளின் சிறப்பு அருள்வாக்கு.
 
     
 
பிரார்த்தனை
    
  வேலை வாய்ப்பு, திருமண வாழ்க்கையில் பிரச்சினை, தொழில் செய்யும் இடத்தில் பிரச்சினைகள், குடியிருக்கும் வீட்டில் பிரச்சினைகள், குழந்தைகளின் கல்வியில் பிரச்சினை, ஜாதகத்தில் பிரச்சினைகள், பிரயாணத்தின் போது பிரச்சினைகள் குழந்தை வரம் வேண்டுதல், பில்லி, சூனியம், எதிரிகளின் சூழ்ச்சி, நீதிமன்ற வழக்குகள் உடல் நலம்  போன்ற குறைகளுக்காக பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும், 108 எலுமிச்சை கனிமாலை அம்மனுக்கு சாத்துவது வழக்கம். அம்மனது திருஉருவத்தின் மீது பக்தர்கள் கொடுக்கும் 16 எலுமிச்சை கனி கொண்ட மாலை, எலுமிச்சை கனி, மலர்மாலை, மலர்கள், கண்ணாடி வளையல்கள் மற்றும் புடவை வைத்து வழிபடுகிறார்கள். குழந்தை வரத்திற்கு வேண்டுபவர்கள் எலுமிச்சை கனிமாலை, வளையல்கள் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். 
    
 தலபெருமை:
     
  நாக கன்னி: கருவறையின் பின்புறம் கீழ்தளத்தில் நான்கு திசைகளிலும் ஒரே கல்லில் உருவம் கொண்டு அதிசயமாக வீற்றிருந்து மக்களுக்கு அருள்புரிந்து வருகிறார் நாககன்னி.
மாசானி அம்மனின் 16 அடி பிரதான திருஉருவம்:

மாசானி அம்மனின் பிரதான உருவமானது 16 அடியில் மூன்று உலகிற்கு அதிபதியாக மூன்றடுக்கு நாகத்தின் மீதும் பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தி ஐந்து தலை நாகன்மேல் அமைந்து வடக்கு நோக்கி படுத்து வான்நோக்கி பார்த்தவாறு பாதம் காட்டி பாவம் நீக்க படுத்தவாறு 16,000 மனைகளில் இருந்து மண் வேண்டும் என கேட்டு பல ஆயிரம் மக்கள் மண் உண்டியல் கொடுக்க மண்ணாலும் பொன்னாலும் கல்லாலும் அம்மன் அருளோடும் சக்தியோடும் அமையப்பெற்றது அம்மனின் திருஉருவம். மேலும் உருவத்திற்குள் மக்கள் நோய் தீர்க்கும் மூலிகை வேர்கள் வைக்கப்பட்டும் பக்தர்கள் அணிந்த விரத மாலைகள் அனைத்தும் சிலைக்குள் போடப்பட்டும் பக்தர்கள் அனைவரும் கொடுத்த உண்டியல் மண்ணாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

பேச்சி அம்மன்: அம்மன் கோட்டையில் பிரதான கருவறையின் மாசானி அம்மனுக்கு கிழக்கில் வடக்குதிசை நோக்கி அமர்ந்திருந்து அருள்புரிந்து வருகிறார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு மாசானி அம்மனும் பேச்சி அம்மனும் அருள்புரிந்து குழந்தை வரம் கொடுத்து வருகிறார்கள்.

ராக்காச்சி அம்மன்:
அம்மன் கோட்டையில் பிரதான கருவறையின் மாசானி அம்மனுக்கு மேற்கில் வடக்கு திசைநோக்கி அமர்ந்திருந்து அருள்புரிந்து வருகிறார். பில்லி சூனியம் எதிரிகளின் சூழ்ச்சி, நீதிமன்ற வழக்குகள் உடல் நலம் ஆகிய குறைகளுக்கு ராக்காச்சி அம்மனிடம் முறையிட, குறைகள் தீர்ந்து வருவது அனைவரும் மகிழ்வுடன் கூறும் உண்மை.

மாசானகோட்டை தியானலிங்கேஸ்வரர்: அம்மனது கருவறையின் கீழ் உலகமே வியக்கும் அளவிற்கு தியான மண்டபம் அமையப்பெற்று உள்ளது. இத்தியான மண்டபத்தில் சாந்த சொரூப தியான நிலையில் ஈரேழு உலகத்தை கட்டிக்காத்து வரும் ஈசன் வடக்கு முகம் நோக்கி அழகாக வீற்றிருக்கிறார். அவருக்கு எதிர்புறம் தென்திசை நோக்கி லிங்க வடிவில் வீற்றுள்ளார். தியான லிங்கேஸ்வரர். மன அமைதிக்காக இவர் முன் அமர்ந்து அமைதியாக தியானம் செய்தால் மனக்குழப்பங்கள் நீங்கி மனம் அமைதி பெறும். இங்கு அமர்ந்து தியானம் செய்தால் குழப்பங்கள் தீரும்.
 
     
  தல வரலாறு:
     
  அகிலத்தை அன்பால் ஆளும் அன்னை ஆதிசக்தியானவள் <உலகத்தில் பல்வேறு இடத்தில் தனக்கென்று ஒரு உருவம் தானே கொண்டு, பக்தர்களுக்கு காட்சி தந்து தனது சக்தியை நிலைநாட்டி அருள்பாலித்து வருகிறாள். ஆதிசக்தியானவள் அன்னை மாசானி என்ற பெயரில் தமக்கென்று ஒரு உருவம் கொண்டு ஐம்பொன்னில் அமைந்து விருதுநகர் மாவட்டம், எரிச்சநத்தம் கிராமத்தில் மாசானக் கோட்டையில் உருவாகி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறாள். பக்தர்கள் வேண்டுதல்படியும் செட்டியபட்டியில் கொடுத்த உத்தரவின்படியும் 14.9.2003ல் எரிச்சநத்தம் குளக்கரையில் அமைந்துள்ள ஆமணச்சி அம்மன் கோயிலில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பூஜையில் மாசானி அம்மன் கோயில் கட்டுவதற்கு மாசானி அம்மன் அருளடியார் அருளோடு தற்பொழுது அமைந்துள்ள ஆதிசக்தி அன்னை மாசானி அம்மன் தியானேஸ்வரர் பீடம் அமைந்த இடம் காண்பிக்கப்பட்டது. 2004 வருடம் ஆடி மாதம் 1ம் தேதி மாசானி அம்மன் ஐம்பொன்சிலை செய்வது என முடிவு செய்யப்பட்டு சிலையானது, தேனி பாரஸ்ட் 5வது தெருவில் அமைந்துள்ள அன்னை மாசானி அம்மன் வார வழிபாட்டு மன்றத்தில் வைத்து உருவாக்கப்பட்டது. 2004ம் வருடம் ஆடி மாதம் 32-ம் நாள் அமாவாசை அன்று அம்மன்சிலை வடிவம் பூர்த்தி செய்யப்பட்டது. உருவாக்கிய அம்மன் சிலையை அம்மனுக்காக செய்யப்பட்ட மரப்பெட்டியில் வைத்து 6 மாதம் வழிபாடும் நடத்தப்பட்டது. 2004ம் வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி அன்னை மாசானி அம்மனுக்கும் எரிச்சநத்தம் கிராமத்தில் கோட்டை எழுப்ப வாஸ்து பூஜை நடத்தப்பட்டது. பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்த மாசானி அம்மன் சிலையை 2005ம் வருடம் தை மாதம்1ம் தேதி கண் திறந்து பூஜை வழிபாடு செய்து வெளியே எடுக்கப்பட்டது. அவ்வாறு வெளியே வந்த மாசானி அம்மன் ஐம்பொன் சிலையை அன்றே தேனியில் இருந்து மேளதாளத்துடன் ஆண்டிபட்டி, மாதரை, உசிலம்பட்டி, செட்டியபட்டி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து எரிச்சநத்தம் மாசானக்கோட்டையில் அம்மனின் திரு உருவச்சிலையை பிரதிஸ்டை செய்யப்பட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்மன் ஐம்பொன் திருஉருவம்: மாசானி அம்மன் கோட்டை உருவாவதற்கு முன் முதன் முதலாக ஐம்பொன்னில் சிலையாக உருவாக்கப்பட்டு கருவறையின் மேற்குபுறம் கீழ்தளத்தில் வடக்கு நோக்கி ஐந்து தலை நாகனுள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். விழாக்காலங்களில் தேரில் உலா வருவதும் சித்திரை மாதம் நடைபெறும் சிறப்பு பூஜையில் அம்மன் குளக்கரைக்குச் சென்று நீராடி 16 அபிஷேகம் செய்து எடுத்து யாகத்தில் வீற்றிருந்து அருள்புரிவதும் இந்த அம்மனின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar