திண்டுக்கலில் இருந்து 6கி.மீ. தொலைவில் உள்ள ரங்கநாதபுர மலையில் கோயில் அமைந்துள்ளது. 175 படிக்கட்டுகள் உள்ளன. மலைக்கோயில் வரை கார், பஸ் செல்ல வழியுண்டு. கோயிலின் முன்புறம் ஆஞ்சநேயர் கோயிலும், அதன்பின் விநாயகர் கோயிலும், அருகே சனீஸ்வரர் கோயிலும், அதனையடுத்து பெருமாள் சன்னிதி உண்டு. சுற்றிலும் மரங்கள், உள்ளன.
பிரார்த்தனை
திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைத்தல்
நேர்த்திக்கடன்:
துலாபாரம் இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
தலபெருமை:
ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பசுமையான காட்சி தரும் அரசமரம், நான் அரசனாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுவதை நினைவுகூர்வதாக உள்ளது என்கின்றனர் இப்பகுதி மக்கள். ஸ்ரீபகவான் சித்தர் பீடம், சக்கரத்தாழ்வார் சன்னிதி, சாந்த விநாயகர் இங்குள்ளது.
தல வரலாறு:
கி.பி. 1500ல் அச்சுத தேவராயர் காலத்தில் தாடிக்கொம்பில் சவுந்தராஜ பெருமாள் கோயிலும், செட்டிநாயக்கன்பட்டி அருகே கம்பத்துறை என்ற இடத்தில் கம்பம் ஒன்றும், அருகே பெருமாள் கோயில் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதுமுதல் இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். திண்டுக்கல் அருகே மலைமேல் பெருமாள் கோயில் உள்ளது தனிச்சிறப்பு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஸ்ரீபகவான் சித்தரின் ஜீவசமாதியும், 14 அடி உயர ஆஞ்சநேயரும் சிறப்பு.
இருப்பிடம் : திண்டுக்கல்லிருந்து பழைய கரூர் ரோட்டில் செல்லும் பாதையில் 6 கி.மீ. தூரத்தில் ஜி.டி. என். கல்லூரி அருகில் செட்டிநாயக்கன் பட்டி, ரங்கநாதபுரத்தில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை
தங்கும் வசதி : தங்கும் வசதி :
ஹோட்டல் பார்சன் கோர்ட் போன்: +91--451-645 1111 ஹோட்டல் மகா ஜோதி போன்: +91--451-243 4313 ஹோட்டல் கோமத் டவர்ஸ் போன்: +91--451-243 0042 ஹோட்டல் வேல்ஸ் பார்க் போன்: +91--451-242 0943 ஹோட்டல் செந்தில் ரெசிடென்ஸி போன்: +91--451-645 1331