Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அகஸ்தீஸ்வரர்
  அம்மன்/தாயார்: தர்மாம்பாள்
  தல விருட்சம்: பூளை
  தீர்த்தம்: சிவபுஷ்க்கரணி
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமப்படி பூஜை
  புராண பெயர்: கொட்டை முத்துக்கள் அதிகம் விளைவிக்கப்பட்டதால் கொட்டையூர் என்றும் அதன் வித்துக்களை எடுத்து எண்ணெய்க்காக அனுப்பியதால் வித்தானபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
  ஊர்: கொட்டையூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ்வருடப்பிறப்பு, ஆடிவெள்ளி, நவராத்திரி, பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  ஈசன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள விக்கிரகங்களுத்து அனைத்து அபிஷேகங்களும் செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் சிதிலமடைந்து கிடந்த இக்கோயிலுக்கு திருப்பணி மகான் அருட்சித்தர் பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகள் பாலஸ் தாபனம் செய்தார் என்பது சிறப்புக்குரியவையாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கொட்டையூர் அஞ்சல்,614404 வலங்கைமான் தாலுகா, திருவாரூர்.  
   
போன்:
   
  +91 9626384387 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப்பக்கம் வாயிலில், நுழைவுவாயில் இடபக்கம் தீர்த்தக்குளம், கிழக்குப் பக்கம் பார்த்த வகையில் ஒரு கலசத்துடன் கூடிய தனி சன்னிதியில் அகஸ்தீஸ்வரரும், தெற்கு பக்கம் பார்த்த வகையில் ஒரு கலசத்துடன் கூடிய தனி சன்னிதியில் செல்லியம்மன் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் வடக்குப் பக்கம் பார்த்த வகையில் அப்பர், திருஞான சம்மந்தர், கிழக்குப்பக்கம் பார்த்த வகையில்  நர்த்தன விநாயகர் அருள்பாலிக்கின்றனர். 100 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் இட வசதி உள்ளது.

நுழைவு வாயிலில் நந்தி பலி பீடம் உள்ளது. கோயில் பின் பக்கம் இடது பக்கம் குபேர விநாயகர், வலது பக்கம் முருகன் தனித்தனி சன்னிதியில் ஒரு கலசத்துடன் அருள்பாலிக்கின்றனர். தெற்கு பக்கம்  தட்சிணாமூர்த்தி, மேற்கு பக்கம் லிங்கோத்பவர், வடக்குப்பக்கம் துர்க்கை, தெற்கே சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கின்றனர். மொத்தத்தில் ஆறுகலசங்கள் கோயிலில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட கோயிலாகும். 2014 பிப்ரவரி 9ம்தேதி புதிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
 
     
 
பிரார்த்தனை
    
  உடல் நலிவு, மனநலம் பாதிப்பு, தாயை நிந்தித்தவர்கள், உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பவுர்ணமி தினம் மற்றும் திங்கள் கிழமை நாவல் பழம் வைத்தும், நெய் கலந்த பாயசம் வைத்து வழிபாடும், சந்திரஹோரையில் தர்மாம்பாள், அகஸ்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தல், மரிக்கொழுந்து மாலை சாற்றி அம்பாளை வழிபட்டால் நினைத்த காரியம் கிட்டுவதால் நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலங்களில் இக்கோயிலும் ஒன்று. நீடாமங்கலம், சந்தானராமர், யமுனாம்பாள், ஆலங்குடி குருபகவான் கோயில்கள் இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கிறது.  
     
  தல வரலாறு:
     
  அண்டத்தில் இருந்து செயல்படும் பிண்டமான பூமி, நீரில் அடங்கி, பூமி, நீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர்,நெருப்பு மூன்றும் காற்றில் அடங்கி, இவை நான்கும் ஆகாயத்தில் அடங்கி, ஒடுங்கி செயல்படும் என்பதை பரவெளியில் நின்று கண்டவர்களை முனிவர்கள். இதை உணர்த்தும் விதமாக சிவபெருமான் பஞ்ச பூதங்களின் குருவான குறுமுனிவர் அகஸ்தியரை அழைத்து திருக்கயிலையில் தனக்கும் பார்வதி தேவிக்கும் நடக்கும் திருமணத்தை காண மூவுலத்தவரும் மிக அதிகமாக வருகை தந்து இருப்பதால் இமயமலை தாழ ஆரம்பித்து வட திசை தாழ்ந்தும் தென் திசை உயர்ந்தும் வர தொடங்கியது. எனவே தாங்கள் தென்திசை சென்று பூமியை சமமாக்க வேண்டும் என ஈசன் உத்தரவிடுகிறார்.

அதற்கு அகஸ்தியர் உடன் தென் திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் தங்கள் திருமண காட்சியை தரிசித்து செல்கிறேன் என்றார். அதற்கு ஈசன் என் திருமணம் வரை இங்கு நீ இருந்தால், இமயமலை இருக்கும் இடத்தில் கடல் தான் இருக்கும் எனவே விரைவில் பொதிகை நோக்கி செல்லுங்கள் இங்கு நடக்கும் திருமண நிகழ்வை தெற்கே வந்து காட்சி தருகிறோம் என கூறி குறுமுனியை தெற்கு நோக்கி அனுப்புகிறார். அதன் பின் அகஸ்திய முனிவர் செல்கிறார். செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே ஈசனை நினைத்து வணங்கி செல்கிறார். அதன்படி இப்பகுதியில் அகஸ்தியர் ஈசனை பூஜித்த இடம் என்பதால் இப்பகுதியில் சோழர் வம்சத்தில் கட்டப்பட்ட 108 சிவன் கோயில் ஒன்றாக  கட்டப்பட்டது. கோயில் பராமரிப்பில்லாமல் முற்றிலும் முட்புதர்கள் மண்டி காடுபோல் இருந்தது. அப்பகுதியினர் இந்துசமய அறநிலையத்துறை அனுமதியுடன் புதிதாக கோயில் கட்டி முற்றிலும் புதிய விக்கிரகங்கள் அமைத்து 2014 பிப்ரவரி 9ம்தேதி கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஈசன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள விக்கிரகங்களுத்து அனைத்து அபிஷேகங்களும் செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் சிதிலமடைந்து கிடந்த இக்கோயிலுக்கு திருப்பணி மகான் அருட்சித்தர் பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகள் பாலஸ் தாபனம் செய்தார் என்பது சிறப்புக்குரியவையாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar