இக்கோயில் கவையகாளியம்மனை மூலவராக அமைத்து, கணேச விநாயகர், விஷ்ணு நாதர், கன்னிமூலை விநாயகர், சப்த கன்னிகள், மற்றும் கருப்பநாயர் என பரிவார தேவதைகள் உள்ளடக்கிய மூன்று நிலை கோபுரத்துடன், கூடிய கருங்கல்லினால் கட்டப்பட்ட கருவறை, அர்த்த மண்டபம் என கட்டப்பட்டுள்ளன. முன் மகாமண்டபம் ஸ்தல விருட்சகத்திற்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடையே நன்கு மிக அழகாக அமைப்பட்டுள்ளது. பழமையான ஸ்தலவிருட்சம் 5 அடி வட்டத்தினைக் கொண்டபருமனாக அமைந்து நாளடைவில் சிதைந்து வருவதை நன்கு பாதுகாக்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் 1500 ச. அடி பரப்பளவில் கோவில் திருவிழாக்களை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
குடும்ப பிரச்சனை தீர, திருமண தடை நீங்க, வியாதி குணமடைய பிரார்த்தனை மேற்கொள்வர்
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பொ<ங்கலிட்டு, பூஜைகள் செய்கின்றனர்.
தலபெருமை:
இப்பகுதி மக்கள் தங்கள் பாதுகாவலுக்கு இவளை மனமாறவேண்டுகின்றனர். இக்கோயில் சில குடும்பங்களுக்கு குல தெய்வமாக அமைந்ததால் அவர்களால் இதற்கான மனையினை கிரயம் பெற்று ஒரு பெரிய வளாகத்தை உருவாக்கி மிகவும் அற்புதமான கோயில் கருங்கல் கட்டிடத்தின் வேலைப்பாடுகளுடன் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இப்பகுதி மக்கள் அனைவரும் மிக பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வருகிறார்கள். சகல வழிபாடுகள், ஆகம விதிகள்படி நடைபெற்று வருகிறது.
தல வரலாறு:
கவயகாளியம்மன் 1996 -ம் வருடம் வரை ஸ்தல விருட்சத்தின் கீழ் அமர்ந்து அருள்பாலித்து வந்தாள். பல நூற்றாண்டுகளாயும், பல தலைமுறைகளாகவும் தங்கள் விவசாய பூமியில் அம்பாள் அமர்ந்து இவ்வூருக்கு காவல் தெய்வமாகவும், பல குடும்பங்களின் குல தெய்வமாகவும் இருந்துவந்தாள். இவளுக்கு 1996 -ம் ஆண்டு சிறிய மேடையில் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது. இது பேரூர் ஆதீனம் தவத்திரு ராமசாமி அடிகளாரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது. அம்மனுக்கு பெரியளவில் கோயில் அமைக்க வேண்டும் என்று பெறப்பட்ட உத்திரவின் பேரில் கல்கட்டிடத்தினால் கொண்ட 3 நில கோபுரத்துடன் பரிவார தேவதைகளுடன் கூடிய சன்னிதிகள் அமைத்து 1.5.2015 தேதியன்று இக்கோயிலின் குடமுழுக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மிகப் பழமைவாய்ந்த கோயில் என்பதால் இது தனிச்சிறப்பு பெறுகிறது.