பிரதோஷ வழிபாடு போலவே அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல சிறப்பு:
பிருந்தாவனவேஸ்வரர் சொர்ணாம்பிகை இருவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6.45 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பிருந்தாவனவேஸ்வரர் திருக்கோயில்,
பிருந்தாவனம் நகர், விமான நிலையம் அருகே
கோயம்புத்தூர் 641014
போன்:
+91 9543020002
பொது தகவல்:
பிருந்தாவனவேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்கிறார். இவரை தரிசிக்கும் அந்தக் கணத்திலிருந்து துயரெல்லாம் மாயமாய் மறைந்து, மகிழ்ச்சி நிறைந்துவிடுவது உண்மை. அருகே அருள்பாலிக்கும் அம்பாள் சொர்ணாம்பிகை, மிகுந்த ஆற்றல் படைத்தவள். பக்தர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றித் தருகிறாள். இந்த அம்மனின் நாமாவளிகளைச் சொல்பவர்களுக்கு மங்கள வாழ்வு நிச்சயம் செல்வ விநாயகர், நவகிரகங்கள், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்திக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. அரச மரமும் வேம்பும் இணைந்து வளர்ந்திருக்க, அதன் கீழே மகாகணபதி காட்சிதருகிறார்.
பிரார்த்தனை
திருமண வயதிலிருக்கும் பெண்கள் இந்த அரசு, வேம்பு மரங்களைச் சுற்றி வந்து, அதனடியே வீற்றிருக்கும் மகாகணபதியை பயபக்தியோடு வேண்டிச் செல்கிறார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு நல்ல இடத்தில்வரன் அமைவதாகச் சொல்கிறார்கள். அதேபோல் குழந்தைப்பேறு வேண்டியும் நிறையப்பேர் இச்சன்னிதிக்கு வந்து பிரார்த்திப்பவர்கள் அதிகம் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெண்கள் இங்குள்ள இறைவன், இறைவிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்றும்; இங்கு அருளாட்சி செய்யும் ஈசனை வழிபட்டால் காலசர்ப்ப தோஷம், நவகிரக தோஷம் அகலும்; வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி, பதவி உயர்வு கிட்டும் என்றும் சொல்லப்படுகிறது. இங்குள்ள செல்வ கணபதி கல்வி அறிவையும், ஞாபக சக்தியையும் அருள்கிறார். துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில்அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகுவால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் எனப்படுகிறது.
தலபெருமை:
மூலவர் பிருந்தாவனவேஸ்வரருக்கு முன்னே காணப்படும் நந்தி பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் காது கொடுத்துக் கேட்டு விட்டு, ஈசனிடம் எடுத்துரைப்பதாக நம்பிக்கை. பக்தர்கள் நந்திதேவரின் காதில் தங்கள் வேண்டுதல்களைச் சொல்வதைக் காணமுடிகிறது. கணவன், மனைவியிடையே தோன்றும் கருத்து வேற்றுமை, இங்கே தனிச்சன்னிதியில்காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை தரிசித்தால் தீரும் என்கின்றனர்.
தல வரலாறு:
அக்காலத்தில் இப்பகுதி துளசிச் செடிகளும், விதவிதமான மலர்ச்செடிகளும் நிறைந்த பிருந்தாவனமாக இருந்தன. அங்கு எழுந்தருளிய லிங்கமானதால், இறைவன் பிருந்தாவனவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பிருந்தாவனவேஸ்வரர் சொர்ணாம்பிகை இருவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
இருப்பிடம் : கோவை சிங்காநல்லுõர் பஸ்ஸ்டாண்டிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பிருந்தாவன் நகர் அமைந்துள்ளது. கோவை சிங்காநல்லுõர் பஸ்ஸ்டாண்டிலிருந்து அவிநாசி ரோட்டில் உள்ள ஏர்போர்ட் பஸ்ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் பிருந்தாவன் நகர் அமைந்துள்ளது.