இக்கோயில் ஓம் என்ற அமைப்பில் அமைந்துள்ளது. இங்கு செல்வவிநாயகர், மாரியம்மன், ஆனந்தீஸ்வரர் போன்ற தெய்வங்கள் காட்சி தருகின்றன.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும், மாற்றுதிறனாளி குழந்தைகள் சரியாக வேண்டும் என்றும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும், பக்தர்கள் மாரியம்மனுக்கு உப்பு வழங்குதல், அங்கபிரதச்சனம் மற்றும் அக்னி சட்டிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
குழந்தைகளுக்கு அம்மை வந்தால் கோயிலுக்கு வந்தால் சரியாவதாகவும், திருமணம் நடக்க வேண்டும் என பெண்கள் இங்கு பூஜை செய்து உடனே பலன் கிடைப்பதாகவும், மற்றும் மாற்றுதிறனாளி குழந்தைகள் சரியாக வேண்டும் என அம்மனிடம் பிரார்த்தித்தவுடன் குணமாகின்றன என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
தல வரலாறு:
200 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்கள் மாரியம்மன் கோயில் வைத்தனர். இங்கு வசிக்கும் ஒருவரின் கனவில் கோயில் வைக்க வேண்டும் என வந்ததால் அன்று முதல் மாரியம்மன் சாமியை குடிசைபோட்டு கும்பிட்டு வந்தனர் இன்று வரை பின்பற்றி வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இக்கோயில் ஓம் என்ற அமைப்பில் அமைந்துள்ளது.
இருப்பிடம் : கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் , கவுண்டம்பாளையத்திலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை கி.மீ., தூரத்தில் உள்ள நல்லாம்பாளையத்தில் கோயில் அமைந்துள்ளது.