கோயில் கிழக்கு முகம் பார்த்து உள்ளது. ஐயப்பன் கிழக்கு பார்த்து உள்ளார். மகாகணபதி கிழக்கு பார்த்தும், காசி விஸ்வநாத விசாலாட்சி கிழக்கு பார்த்தும், முருகன் வள்ளி, தெய்வானை கிழக்கு பார்த்து, லட்சுமி நாராயண மகாலட்சுமி கிழக்கு பார்த்தும், துர்க்கை வடக்கு பார்த்தும், செல்வ கணபதி வடக்கு பார்த்தும், மாரியம்மன் பொறவியம்மன், ஆதிபொரவியம்மன் வடக்கு பார்த்து, ஆஞ்சநேயர், உற்சவ மூர்த்தி ஐயப்பன் கிழக்கு பார்த்து, தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து, பைரவர் தெற்கு பார்த்தும், நவகிரக பஜனை மண்டபம் உள்ளது.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தைபாக்கியம், உத்தியோகம் கிடைக்க இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
முருகனுக்கு 12 வாரம் பூஜை செய்தால் கல்யாணம் நடக்கும், திருமணம் நடந்தவுடன் முருகனுக்கு தாலி செய்து தருகின்றனர். துர்கை அம்மனுக்கு வெள்ளி, செவ்வாய் ராகு காலம் பூஜை செய்தால் கல்யாணம் மற்றும் குழந்தை பெறும், ஐயப்பனுக்கு சனிக்கிழமை நெய் அபிஷேகம் செய்தால் உத்தியோகம் பணி கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வடமாலை மற்றும் வெற்றிலை மாலை செலுத்தினால் கல்யாண காரியம் நிவர்த்தியாகும்.
தல வரலாறு:
பல முன்னோர்கள் இதே இடத்தில் மாரியம்மன் மற்றும் பொறவியம்மன் வைத்து பூஜை செய்து வந்தனர். கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் லே-அவுட் செய்து மணிகண்டநகர் வந்தது. அதிலிருந்து ஐயப்பன் போட்டோ வைத்து பூஜை மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் வீட்டில் பூஜை செய்தனர். 1986 மாரியம்மனுக்கு முதல் கும்பாபிஷேகம், பிறகு 2002 பரிவார தெய்வங்கள் சன்னிதி அமைத்து மூன்றாம் கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு 22.8.16 அன்று நான்காவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 50 வருடங்களாக சபரிமலை யாத்திரை நடக்கிறது. 1986ம் ஆண்டு கோயில் கட்டப்பட்டது.