வரலட்சுமி விரத பூஜை, மார்கழி மாத முழுவதும் பூஜை, ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள், வெள்ளிக்கிழமை வார வழிபாடு, விநாயகர் சதுர்த்தி, கிர்த்திகை, பவுர்ணமி பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
தாயார் தாமரை மலர்மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மகாலட்சுமி கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளன. மகாலட்சுமி வாகனம் அன்னபறவை மேற்கு பார்த்து உள்ளது. விநாயகர் மற்றும் மற்றும் முருகன் கிழக்கு பார்த்து உள்ளனர். கன்னிமார்கள் கிழக்கு பார்த்து உள்ளனர். ராகு கேது கிழக்கு பார்த்து உள்ளது. பரிவார தெய்வங்கள் அபிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி, பிராம்மி, விஷ்ணு துர்க்கை அமைந்துள்ளது.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர் மற்றும் அனைத்து செல்வங்களுக்கு வேண்டிய வரம் தருபவள் என்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
நெய்தீபம் ஏற்றி, 18 அபிஷேக பூஜைகள் மற்றும் அம்மனுக்கு பட்டு சாற்றுதல் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
அம்மன் கிழக்கு பார்த்து உள்ளார். மகாலட்சுமி தாயாருக்கு வன்னி, வில்வமரம் உகந்த மரங்களாகும். முன் மண்டபத்தில் அஷ்டலட்சுமி தேவதைகள் உள்ளனர்.
தல வரலாறு:
குரு சமுதாயத்தினர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயில் மகாலட்சுமி வழிபடுவது என முன்னோர்கள் நேசித்து முன்னோர் காலத்திலிருந்து இன்றுவரை முறையாக வழிபாடுகள் தொடர்ந்து மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. துறத்தி மரம் வைத்து மரத்தின் கீழ் மகாலட்சுமி தாயார் அமைத்து வழிபாடு நடத்தி வந்தார்கள். இந்தி மரத்தினுடைய மகிமை பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்றவை அண்டாதிருக்க வழிபட துவங்கினார்கள். 1977ல் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். பிறகு 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தாயார் தாமரை மலர்மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
இருப்பிடம் : கோவை டவுன் ஹாலிலிருந்து 5 கி.மீ., துரத்திலுள்ள புலியகுளம் பெரியவிநாயகர் கோயிலிலிருந்து கிழக்கே 3 கி.மீ., தொலைவில் மகாலெட்சுமி கோயில் அமைந்துள்ளது. டவுன்ஹால் டூ சவுரி பாளையம் பஸ் எண்: 22, எஸ்2, எஸ்3, எஸ்4, 61, எஸ்13, காந்திபுரம் டூ சவுரிபாளையம் 95, 114